தளபதியோட ‘வெறித்தனமான’ FAN-ஆ இருப்பாங்க போலயே.. நான் மலேசியாவில் இருந்து ‘சென்னைக்கு’ வந்ததே இதுக்காகதான்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்மாஸ்டர் படத்தைப் பார்க்க வேண்டும் என்பதற்காக மலேசியாவில் இருந்து சென்னைக்கு இளம்பெண் வந்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

விஜய் நடித்த மாஸ்டர் படம் பொங்கலுக்கு வெளியாகி தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கிறது. கடந்த வாரம் முதல் ஓடிடிலும் மாஸ்டர் வெளியாகி உள்ளது. ஆனாலும் மாஸ்டர் திரைப்படத்தைப் பார்க்க மக்கள் கூட்டம் இன்னமும் தியேட்டருக்கு வருவதாக திரையரங்க உரிமையாளர்கள் சிலர் தெரிவித்துள்ளனர். ஆனால் கொரோனா பரவல் காரணமாக பல்வேறு நாடுகளில் தியேட்டர்களில் இந்தப் படம் வெளியாகவில்லை.
இந்த நிலையில் மலேசியாவில் வாழும் சென்னை மயிலாபூரைச் சேர்ந்த ஆஷ்லினா என்ற பெண் மாஸ்டர் படத்தை பார்க்க வேண்டும் என்று மிகவும் ஆவலுடன் இருந்துள்ளார். இதற்காக அவர் மலேசியாவிலிருந்து சென்னைக்கு வர பலமுறை முயற்சித்தும் முடியவில்லை.
இதனை அடுத்து நீண்ட முயற்சிக்குப் பின்னர் ஆஷ்லினா, மலேசியாவிலிருந்து சென்னைக்கு வந்துள்ளார். வீட்டுக்கு வந்தவுடன் முதல் வேலையாக தியேட்டரில் மாஸ்டர் படம் பார்ப்பதற்காகதான் சென்றுள்ளார். ஆனால் டிக்கெட் கிடைக்காததால் ஏமாற்றம் அடைந்துள்ளார். உடனே அண்ணாசாலையில் உள்ள ஒரு தியேட்டரில் ஒட்டுமொத்த இருக்கைகளையும் முன்பதிவு செய்துள்ளார்.
150 இருக்கைகள் கொண்ட அந்த தியேட்டரில், தனது உறவினர்கள், நண்பர்கள் என அனைவரையும் அழைத்துக்கொண்டு படம் பார்த்து விசில் அடித்து மாஸ்டர் படத்தை கொண்டாடியுள்ளார். இதனை அடுத்து தியேட்டருக்கு வெளியில் வைக்கப்பட்டிருந்த பேனர்கள் முன்பு நின்று கத்திக் கூச்சலிட்டு, விஜய் கத்துவதை போல் தானும் போஸ் கொடுத்து எடுத்த புகைப்படத்தை தனது பேஸ்புக், இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் ஆஷ்லினா வெளியிட்டுள்ளார்.
மாஸ்டர் படத்தைப் பார்க்க வேண்டும் என்பதற்காகவே மலேசியாவில் இருந்து, தான் பறந்து வந்ததாக அவர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்
