'எடக்குமடக்காக சிக்கிய சஃபாரி வாகனம்'... 'எதிர்பாராத நேரத்தில் ஆக்ரோஷமான புலி'... வைரலாகும் வீடியோ!
முகப்பு > செய்திகள் > இந்தியாசஃபாரி வாகனத்தில் வந்தவர்களை காருக்குள்ளேயே வைத்து நடுங்கச்செய்த புலியின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

பெங்களூருவில் உள்ள பேனர்கட்டா தேசிய பூங்காவை பார்வையிட சஃபாரி வாகனத்தில் ஒரு குழுவினர் வந்துள்ளனர்.
பூங்காவுக்கு உள்ளே இருந்த சாலையில், அவர்கள் சஃபாரி காரை நிறுத்தி இருந்தனர்.
காரில் இருந்து பூங்காவை பார்வையிட்டபடி புறப்படலாம் என வண்டியை ஸ்டார்ட் செய்து போது ஒரு பேரதிர்ச்சி காத்திருந்தது.
திடீரென அவ்வழியாக வந்த பெங்கால் புலி ஒன்று, காரின் பின் புறத்தை வாயால் இறுகக் கவ்வியது.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பார்வையாளர்கள் செய்வதறியாது விழித்தனர்.
தொடர்ந்து தன் வாயால் அங்கும் இங்குமாக கடித்துக் கொண்டிருந்த புலி, ஒரு கட்டத்தில் காரின் பின் பக்கத்தை வலுவாக கவ்வி, சஃபாரி வாகனத்தையே பின்னோக்கி நகர்த்தியது.
ஆக்ரோஷமான அந்த புலியின் வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
வீடியோ இணைப்பு கீழே:

மற்ற செய்திகள்
