'ஹலோ சென்னை, நாங்க வரோம், தட்டி தூக்குறோம்'... 'RCB ஜெர்சியை போட்டு இன்ஸ்டாவில் சர்ப்ரைஸ் கொடுத்த பிரபல வீரர்'... உற்சாகத்தில் கோலி!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுகிரிக்கெட் ரசிகர்கள் ஆர்வமுடன் எதிர்பார்த்த ஐபிஎல் போட்டிகள் நாளை சென்னையில் ஆரம்பிக்க இருக்கிறது.
ரசிகர்கள் ஆர்வமாக எதிர்பார்த்த 14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நாளை தொடங்க இருக்கிறது. சென்னையில் நடக்கும் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதுகின்றன. முதல் போட்டியே ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் உலகின் தலைசிறந்த ஓட்டப்பந்தைய வீரரும், 8 முறை ஒலிம்பிக் தங்கப் பதக்கம் வென்றவருமான ஜமைக்கா நாட்டை சார்ந்த உசைன் போல்ட், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் ஜெர்சியை அணிந்திருக்கும் தனது புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதோடு அவர் ஆர்.சி.பி. அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் ஏபி டி வில்லியர்ஸ் ஆகிய இருவரையும் டேக் செய்து, ‘சேலஞ்சர்ஸ் உங்களுக்கு நான் ஒன்றை தெரியப்படுத்துகிறேன். நான் இன்னமும் வேகமான பூனையாகத்தான் சுற்றிக் கொண்டிருக்கிறேன்’ என பதிவிட்டிருந்தார்
உசைன் போல்டின் இந்தப் பதிவுக்கு விராட் கோலி, டிவில்லியர்ஸ் இருவரும் கமெண்ட் செய்துள்ளனர். இதுகுறித்து கோலி பதிவிடுகையில், "எந்த சந்தேகமும் இல்லை, அதனால்தான் உங்களை இப்போது எங்கள் அணியில் சேர்த்துள்ளோம்" என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் டிவில்லியர்ஸ் ''கூடுதல் ரன்கள் தேவைப்படும் போது யாரை அழைப்பது என எங்களுக்குத் தெரியும்'' எனப் பதிவிட்டுள்ளார்.
இதற்கிடையே இந்த முறை நிச்சயம் ஐபிஎல் கோப்பையை வெல்லும் முனைப்பில் கோலி இருக்கிறார். இதனால் முதல் போட்டியே ரசிகர்களுக்கு விருந்தாக இருக்கும் எனக் கருதப்படுகிறது.