'இந்தியாவின் 'ஐடி' தலைநகருக்கு வந்துள்ள சோதனை'... 'அடுத்து என்ன நடக்குமோ'... அச்சத்தில் மக்கள்!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்தியாவின் ஐடி தலைநகர் என அழைக்கப்படும் பெங்களூருக்கு புதிய சிக்கல் உருவாகியுள்ளது.

2021 தொடக்கத்தில் கொரோனா பெருந்தொற்று ஓரளவிற்குக் கட்டுக்குள் இருந்தது. ஆனால் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தைத் தொட்டு வருகிறது. கர்நாடகா மாநிலத்தில் குறிப்பாகப் பெங்களூருவில் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ளது. அங்கு கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மட்டும் பாதிப்பு 2 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.
மென்பொருள் தலைநகரான பெங்களூரில் பல மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் வசித்து வருகிறார்கள். தற்போது கொரோனா அதிகரித்து வருவது அவர்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. மாநில அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து இருந்தாலும் கொரோனா பரவல் கட்டுக்குள் வரவில்லை என்று அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
மார்ச் மாதத் தொடக்கத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 300 ஆக இருந்தது. ஆனால், மார்ச் 28-ஆம் தேதி அது 3,000 ஆக உயர்ந்துள்ளது. இது சுகாதாரத் துறையைக் கவலையடையச் செய்துள்ளது. இதுகுறித்து மாநில சுகாதார மற்றும் மருத்துவக் கல்வித்துறை அமைச்சர் சுதாகர் கூறுகையில், "கர்நாடகா மாநிலத்திலும் கொரோனா பரவல் வேகமெடுத்துள்ளது.
30 நாட்களில் 10 மடங்கு அதிகமாக கொரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த முழுவீச்சில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இப்போதைக்கு மாநிலத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தும் திட்டம் அரசிடம் இல்லை’’ என்றார்.

மற்ற செய்திகள்
