ஸ்பா சென்டர் 'பேரு'ல,,.. அங்க வேற 'என்னமோ' நடக்குது,,.. அதிகாரிகளுக்கு வந்த போன் கால்,,.. போய் 'செக்' பண்ணி 'பாத்தது'ல ,,.. காத்திருந்த 'அதிர்ச்சி'!!!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Ajith | Sep 02, 2020 03:01 PM

டெல்லியின் திலக் நகர் என்னும் பகுதியில், ஸ்பா மற்றும் மசாஜ் சென்டர் என்னும் போர்வையில் பாலியல் மோசடி நடந்து வருவதாக, டெல்லி மகளிர் ஆணையத்திற்கு தகவல் கிடைத்துள்ளது.

delhi spa raided by dcw and cops and officials shocked

தொடர்ந்து, டெல்லி மகளிர் ஆணைய தலைவர் ஸ்வாதி மலிவால் தலைமையில் சிலர் உடன் சென்று அந்த ஸ்பா சென்டரை ஆய்வு செய்தனர். அப்போது அங்கிருந்து, பயன்படுத்தப்பட்ட ஆணுறைகளும், புறக்கணிக்கப்பட்ட சில பொருட்களையும் குழு கண்டெடுத்தது. முன்னதாக, மகளிர் ஆணையர் அலுவலகத்திற்கு வந்த தொலைபேசி அழைப்பில் பேசிய நபர், ஸ்பா சென்டர் என்ற பெயரில் பாலியல் தொழில் நடப்பதாகவும், ஊரடங்கு காலங்களிலும் அது இயங்கியதாகவும் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து தான் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அதிகாரிகள் அங்கு சென்ற போது, பல வாடிக்கையாளர்கள் அங்கு காத்திருந்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்த நிலையில், அங்கிருந்த வாடிக்கையாளர்கள் அனைவரையும் போலீசார் காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். அதன்பின், அங்கிருந்த சிசிடிவி காட்சிகள் அனைத்தும் சேகரிக்கப்பட்டது.

தொடர்ந்து, அங்கு பணிபுரியும் பெண் ஒருவர் மூலம் ஸ்பாவின் உரிமையாளரை தொடர்பு கொள்ள முயற்சித்த நிலையில், அவருக்கு அங்கு நடந்த சம்பவம் குறித்து தெரிய வந்ததால் தனது செல்போனை உரிமையாளர் சுவிட்ச் ஆப் செய்துள்ளார். மேலும், அங்கு பணிபுரியும் பெண்களிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக, ஸ்வாதி மலிவால் கூறுகையில், 'ஸ்பா என்ற பெயரில் பாலியல் தொழில் நடப்பதாக வந்த தகவலின் படி, இங்கு வந்து பரிசோதனை மேற்கொண்டதில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியானது. மத்திய அரசின் அறிவிப்பு படி, ஸ்பா செயல்படக்கூடாது என அறிவுறுத்தியும் இவர்கள் எப்படி செயல்பட்டனர் என்பது மிகவும் அதிர்ச்சியாக உள்ளது. போலீசாருக்கும் தெரியாமல் இது போன்ற சம்பவங்கள் எப்படி நிகழ்ந்துள்ளது?. இதுகுறித்து விரைவில் விசாரணை மேற்கொள்ளவுள்ளோம்' என தெரிவித்தார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Delhi spa raided by dcw and cops and officials shocked | India News.