எப்போவும் ஸ்லீப்பிங் 'மோட்'லயே இருக்கீங்களா??.. அப்போ இது உங்களுக்கு தான்... தினமும் அதிக நேரம் தூங்குனா... 1 லட்சம் வர பரிசு குடுக்குறாங்க,,.. வைரலாகும் 'அறிவிப்பு'!!!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Ajith | Sep 02, 2020 01:58 PM

பெங்களூரை சேர்ந்த மெத்தை தயாரிப்பு நிறுவனமான 'வேக்ஃபிட்' கடந்த ஆண்டு ஒரு  அசத்தல் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தது.

bangalore startup pays 1lkh for sleeping 9 hrs daily for 100 days

அதாவது, 100 நாட்கள் தொடர்ந்து 9 மணி நேரம் தூங்குவோருக்கு 1 லட்ச ரூபாய் பரிசு வழங்கப்படும் என அறிவித்திருந்தது. தூங்குவது இயல்பான ஒன்று தான் என நினைத்தாலும், இதில் இன்டெர்ன்ஷிப் புரிவது என்பது எளிதல்ல. எப்போதும் தூங்குவதையே ஒருவர் விரும்புவதையும், தூங்குவதே தங்களின் முன்னுரிமை என்பதையும் போட்டியாளர்கள் நிரூபிக்க வேண்டும். கடந்தாண்டு இந்த முயற்சி வெற்றி பெற்றிருந்த நிலையில், சுமார் 1.7 லட்சம் பேர் இந்த தூங்கும் போட்டியில் கலந்து கொண்டனர். ஆனால், அதில் 23 பேரால் மட்டுமே வெற்றி பெற முடிந்தது.

இந்நிலையில், இந்தாண்டுக்கான போட்டியை வேக்ஃபிட் நிறுவனம் அறிவித்துள்ளது. பங்கேற்க விரும்புவோர் வேக்ஃபிட் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். தூக்கம் குறித்த மனநிலையை மாற்றுவதும், தூக்கத்தின் மூலம் எவ்வளவு ஆரோக்கியமாக இருக்க முடியும் என்பதை நோக்கம் என அந்நிறுவனத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல, வெற்றிகரமாக இந்த போட்டியை முடிப்பவர்களுக்கு மட்டுமே பரிசுத்த தொகை வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Bangalore startup pays 1lkh for sleeping 9 hrs daily for 100 days | India News.