"வணக்கம் சார்",,.. வாடகைக்கு வீடு 'வேணும்',,.. நம்பி வீட்டுக்குள்ள விட்ட பெரியவர,,.. ஏமாத்தி மொத்தமா அபேஸ் செஞ்ச 'தம்பதி'!!!
முகப்பு > செய்திகள் > இந்தியாபெங்களூருவின் பானஷங்கரி என்னும் பகுதியில் அமைந்துள்ள விவேகானந்தர் நகரில் வசித்து வருபவர் ஜி.கே சுப்ரமணிய நாயுடு(69). அவர் தனது வீட்டில் தனியாக இருந்துள்ளார்.

அப்போது அங்கு வந்த தம்பதியர்கள், தங்களை நாயுடுவிடம் அறிமுகப்படுத்திக் கொண்ட நிலையில், வாடகை வீடு தேடி வந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். தொடர்ந்து, அவர்களிடம் வாடகை மற்றும் டெபாசிட் குறித்து பேசிய சுப்ரமணிய நாயுடு, பாத்ரூம் சென்றுள்ளார்.
மறுகணமே அந்த முதியவரை பாத்ரூமில் வைத்து பூட்டிய அந்த தம்பதியர், வீட்டில் இருந்த சுமார் 300 கிராம் தங்க நகைகள், மொபைல் போன், டெபிட் கார்டு, வாட்ச் உள்ளிட்ட பல பொருட்களை திருடி விட்டு அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பித்துச் சென்றுள்ளனர். சிறிது நேரத்தில் அந்த முதியவரின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வீட்டிற்கு வந்து கழிவறையில் இருந்த முதியவரை மீட்டனர்.
சுமார் 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை அந்த இரண்டு பேரும் திருடிச் சென்றது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த சுப்ரமணிய நாயுடு, இந்த திருட்டு சம்பவம் தொடர்பாக, போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

மற்ற செய்திகள்
