வேலையவிட்டு அதிரடியாக நீக்கிய முதலாளி!.. இளைஞர்கள் போட்ட 'அதிபயங்கர ப்ளான்'!.. அடுத்தடுத்து நடந்த 'திகில்' சம்பவங்கள்!
முகப்பு > செய்திகள் > இந்தியாதெலங்கானாவில் பணியில் இருந்து நீக்கியதற்காக முதலாளியின் வீட்டில் கோடிக்கணக்கில் கொள்ளையடித்த இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.
![telangana seven burglars held with 1crore money from employer layoff telangana seven burglars held with 1crore money from employer layoff](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/india/telangana-seven-burglars-held-with-1crore-money-from-employer-layoff.jpg)
தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தை அடுத்த பாலா ரெட்டி நகரை சேர்ந்தவர் அசாரூதின் அகமது. ரியல் எஸ்டேட் வியாபாரியான இவரிடம் முகமத் அஷ்வத் என்பவர் கார் ஓட்டுனராகவும், மிஸ்ரா அஸ்வஷ்க் என்பவர் தோட்ட பணியாளராகவும் கடந்த 2 வருடங்களாக பணிபுரிந்து வந்துள்ளனர். ஆனால், சில பிரச்னைகள் காரணமாக அவர்களை கடந்த மாதம் பணிநீக்கம் செய்துள்ளார் உரிமையாளர், அசரூதின் முகமது. இதனால், ஆத்திரமடைந்த அவர்கள் அசாரூதினை பழிவாங்க திட்டம் தீட்டியுள்ளனர். அதன்படி தனது நண்பர்களுடன் 6 பேருடன் சேர்ந்து உரிமையாளர் அசாரூதின் வீட்டில் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக முகமத் அஷ்வத் மிஸ்ரா அஸ்வஷ்க் உள்ளிட்ட 6 பேரை கைது செய்துள்ள போலீசார், அவர்களை சிறையில் அடைத்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.1.28 கோடியை பறிமுதல் செய்தனர்.
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
மற்ற செய்திகள்
![](https://www.behindwoods.com/images/spacer.gif)