'ஆடம்பர சொகுசு பங்களா'... 'யாராவது காப்பாத்துங்க'... 'கிழிந்த ஆடையோடு அலறியபடி ஓடிவந்த பெண்'... சென்னை அருகே நடந்த அதிர்ச்சி சம்பவம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Jeno | Jul 25, 2020 04:36 PM

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் பல ஆடம்பர சொகுசு பங்களாக்கள் உண்டு. இங்குப் பிரபலங்கள் ஓய்வு எடுப்பதற்காகவும், வார இறுதியில் நடத்தப்படும் விருந்து நிகழ்ச்சிகளுக்காகவும் இவை பயன்படுத்தப்படுவது வழக்கம். மற்ற நேரங்களில் பெரும்பாலும் அவை பூட்டப்பட்டு தான் கிடக்கும். இந்த பங்களாக்களைப் பராமரிக்க எப்போதும் காவலாளிகள் அங்கேயே குடும்பத்துடன் தங்கி வேலை பார்ப்பது வழக்கம். தற்போது கொரோனா காரணமாக ஊரடங்கு அமலில் இருப்பதால் அங்குள்ள சொகுசு பங்களாக்கள் பூட்டியே கிடக்கிறது.

Chennai woman trying to abused by Group of Robbers

இந்நிலையில் சென்னை கோபாலபுரத்தைச் சேர்ந்த விளம்பர படத் தயாரிப்பாளர் ஒருவருக்குச் சொந்தமான சொகுசு பங்களா ஒaன்று மாமல்லபுரத்தில் உள்ளது. விருந்தினர்கள் தங்கிச் செல்லும் வகையில் சகல வசதிகளுடன் இந்த பங்களா செயல்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. அந்த சொகுசு பங்களாவின் காவலாளி ராஜேந்திரன் என்பவர், இந்த வளாகத்தின் ஒரு பகுதியில் சிறிய வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இதனிடையே சம்பவத்தன்று மாலை 6 மணியளவில் அந்த சொகுசு பங்களாவின் பின்பக்கம் உள்ள மரத்தின் மீது ஏறி கொள்ளையர்கள் உள்ளே புகுந்துள்ளார்கள்.

இதைப் பார்த்த காவலாளி ராஜேந்திரன் அவர்களைத் தடுக்க முயன்ற நிலையில், காவலாளி ராஜேந்திரனைக் கத்தியால் தாக்கி விட்டு அவரது வீட்டிற்குள் புகுந்துள்ளார்கள். வீட்டினுள் இருந்த அவரது மாமனார் மற்றும் குழந்தைகளை பேக்கேஜிங் டேப்பால் வாய், கை,கால்களைக் கட்டி ஒரு அறைக்குள் போட்டு அடைத்துள்ளனர். பின்னர் காவலாளியின் மனைவியை மட்டும் தனியாக அழைத்துச் சென்று ஒவ்வொரு அறையாகத் திறக்க வைத்துள்ளனர். அந்த பங்களாவிலிருந்த ஐந்துக்கும் மேற்பட்ட சொகுசு அறைகளைச் சல்லடை போட்டுத் தேடியும் நகை- பணம் ஏதும் கிடைக்கவில்லை. இதனால் ஆத்திரத்தில் அங்கிருந்த டிவியை அடித்து உடைத்துள்ளனர்.

பின்னர் காவலாளியின் மனைவியின் ஆடைகளைக் கிழித்து அவரை மானபங்கப்படுத்திய கொள்ளையர்கள், அவரிடம் இருந்து ஒரு சவரன் தங்கக் கம்மலைப் பறித்துள்ளனர். காவலாளியின் வீட்டுக்குள் சென்று குழந்தையின் வெள்ளிக் கொலுசு, தங்கச் சங்கிலி, வீட்டிலிருந்த மின்சார அடுப்பு ஆகியவற்றைத் தூக்கிக் கொண்டு பங்களாவின் மேல்மாடிக்குச் சென்றுள்ளனர். காவலாளி மனைவியின் ஆடைகள் கிழிக்கப்பட்டதால் அவர் வெளியில் வரமாட்டார் என நினைத்த கொள்ளையர்கள் கதவைப் பூட்டாமல் சென்றுள்ளார்கள். அப்போது வெளியே பால்காரர் செல்லும் சத்தம் கேட்டதால், காவலாளியின் மனைவி, காப்பாற்றுங்கள் என அலறியபடி கதவைத் திறந்து கொண்டு வெளியில் ஓடி வந்துள்ளார்.

இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த பால்காரர், தெற்குபட்டு ஊர் மக்கள் துணையுடன் கொள்ளையர்களை விரட்டி சென்றுள்ளார்கள். ஊர்மக்கள் வருவதைப் பார்த்த கொள்ளையர்கள் மாடியிலிருந்து குதித்துத் தப்பிச் சென்றுள்ளார்கள். இதையடுத்து வெட்டுக் காயங்களுடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த காவலாளி ராஜேந்திரனை மீட்ட பொதுமக்கள் அவரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தார்கள். தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், வீட்டின் பின் பக்கம் கொள்ளையர்கள் மின்சார அடுப்பை வீசிச் சென்றிருப்பதைக் கண்டறிந்தனர்.

இதற்கிடையே காவல்துறையினர் தங்களை அடையாளம் கண்டுகொள்ள கூடாது என்பதற்காக, வீட்டின் அனைத்துப் பகுதிகளிலும் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களையும் அடித்து நொறுக்கியதோடு, கேமராவில் பதிவாகும் காட்சிகள் சேமித்து வைக்கப்படும் ஹார்ட் டிஸ்க்கையும் தூக்கிக் கொண்டு சென்றதும் தெரியவந்தது. 5 தனிப்படைகள் அமைத்துள்ள போலீசார், கைரேகைகளைக் கொண்டு கொள்ளையர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். கொள்ளையடிக்க வந்த இடத்தில் எதுவும் இல்லாததால், பெண்ணை கொள்ளையர்கள் மானபங்கபடுத்திய நிகழ்வு கடும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Chennai woman trying to abused by Group of Robbers | Tamil Nadu News.