'என்ன நம்ப வச்சு கடைசியா எனக்கே விபூதி அடிச்சிட்டல'... 'பாய் பிராண்ட்டுடன் சேர்ந்து செஞ்ச பகீர் சம்பவம்'... அதிர்ந்து நின்ற தந்தை!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇளம் பெண் ஒருவர் தனது ஆண் நண்பருடன் சேர்ந்து சொந்த வீட்டிலேயே திருடிய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மும்பையைச் சேர்ந்தவர் உம்ரதரஷ் குரேஷி. இவரது மகள் உஷ்மா குரேஷி. 21 வயது இளம் பெண்ணான இவர், அரோரா என்ற 35 வயது பள்ளி உடற்கல்வி ஆசிரியர் ஒருவரைக் காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் ஜூலை 30 ம் தேதி அன்று தன் மகள் உஷ்மாவை காணவில்லை என உம்ரதரஷ், போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் தனது மகள், அரோரா என்பவருடன் வீட்டை விட்டு போயிருக்கலாம் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
இளம்பெண் உஷ்மா குரேஷியை போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில், தனது வீட்டின் லாக்கரில் இருந்த நகையும், ரூ.10 லட்சம் ரொக்கமும் காணவில்லை என்பதை உம்ரதரஷ் கண்டறிந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், பணமும் ரொக்கமும் எப்படிக் காணாமல் போனது என யோசித்து வந்துள்ளார். அப்போது தான் கடந்த ஜூலை 23ம் தேதி நகைகளைப் பாதுகாப்பான இடத்துக்கு மாற்றவுள்ளதாக லாக்கர் சாவியை தந்தையுடன் உஷ்மா வாங்கியுள்ளார்.
அதனை நினைவுப்படுத்திய தந்தை, சொந்த மகளே தன்னை நம்ப வைத்து ஏமாற்றியது குறித்து விரக்தியின் உச்சத்திற்கே சென்றார். இறுதியில் பாசம் பெரிதல்ல என முடிவெடுத்த தந்தை, பணமும் நகையும் காணாமல் போனது குறித்து, தன் மகள் மீதே போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். இதையடுத்து திருட்டு வழக்குப் பதிவு செய்த போலீசார், உஷ்மா மற்றும் அவரது ஆண் நண்பரைத் தேடிவந்தனர். தேடுதலில் பஞ்சாபில் அவர்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக பஞ்சாப் போலீசாரை தொடர்புகொண்ட மும்பை போலீசார் தங்கும் விடுதியிலிருந்த உஷ்மாவையும், அரோராவையும் கைது செய்தனர்.
பின்னர் கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். சொந்த வீட்டிலேயே கைவைத்த இளம் பெண் ஆண் நண்பருடன் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்
