‘அப்போ சொன்னது எல்லாமே பொய்யா..!’ வருங்கால கணவரை அதிரடியாக கைது செய்த பெண் போலீஸ்.. ரகசிய விசாரணையில் தெரியவந்த அதிர்ச்சி..!
முகப்பு > செய்திகள் > இந்தியாவருங்கால கணவராக வர இருந்தவரை பெண் போலீஸ் அதிகாரி கைது செய்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read | “விமானம் நிக்கிற வரலாம் வெய்ட் பண்ண முடியாது”.. பின் சீட்டில் இருந்த பயணி திடீரென செஞ்ச அதிர்ச்சி காரியம்..!
அசாம் மாநிலம் நாகோன் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜுன்மோனி ரபா. இவர் அப்பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் காவல் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு திருமணத்துக்காக அவரது பெற்றோர் வரன் தேடி வந்துள்ளனர். மேலும் ஜுன்மோனி ரபாவும் மேட்ரிமோனியில் தனது விவரங்களை பதிவு செய்திருந்தார்.
இந்த சூழலில், கடந்த ஆண்டு மார்ச் மாதம் ராணா போஹாட் (வயது 33) என்பவர் ஜுன்மோனி ரபாவுக்கு மேட்ரிமோனி மூலமாக அறிமுகம் ஆகியுள்ளார். இதனைத் தொடர்ந்து இருவரும் தொலைப்பேசியிலும், நேரிலும் ஒருவரையொருவர் பார்த்து பேசி பழகியுள்ளனர். அப்போது ராணா போஹாட் தன்னை அரசு மக்கள் தொடர்பு அதிகாரி (பிஆர்ஓ) எனக் கூறியுள்ளார். இதனை நம்பிய ஜுன்மோனி ரபாவும் திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்துள்ளார்.
இதனை அடுத்து, இவர்களின் நிச்சயதார்த்தம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து வரும் நவம்பர் மாதம் இருவருக்கும் திருமணம் நடைபெறுவதாக இருந்தது. இந்த நிலையில், கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு ஜுன்மோனி ரபாவின் தொலைபேசியில் தொடர்பு கொண்ட நபர், ‘நீங்கள் திருமணம் செய்யப் போகும் ராணா போஹாட் பல மோசடி செயல்களில் ஈடுபட்டவர். அவரை நம்பாதீர்கள்’ எனக் கூறி அழைப்பை துண்டித்துவிட்டார்.
முதலில் இதனை ஜுன்மோனி பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இதனிடையே ராணா போஹாட்டுடன் தொலைபேசியில் பேசியபோது, அவர் பணிபுரியும் அலுவலகம் எங்குள்ளது எனக் கேட்டுள்ளார். அதற்கு ராணா போஹாட் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த ஜுன்மோனி, ராணா போஹாட்டுக்கு தெரியாமலேயே அவர் குறித்து விவரங்களை சேகரித்துள்ளார்.
அப்போது ராணா போஹாட், தன்னை ஒஎன்ஜிசி அரசு நிறுவனத்தில் உயரதிகாரியாக இருப்பதாக கூறி, அங்கு வேலை வாங்கித் தருவதாக பலரிடம் கோடிக்கணக்கான பணத்தை ஏமாற்றி மோசடி செய்துள்ளது தெரியவந்தது. அசாம் மட்டுமல்லாமல் மேகாலயா, மிசோராம் உள்ளிட்ட மாநிலங்களிலும் இதுபோன்ற ராணா போஹாட் ஏமாற்று வேலையில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது.
இதனை அடுத்து ராணா போஹாட் மீது ஜுன்மோனி தனது காவல் நிலையத்திலேயே புகார் அளித்தார். ஆனால், இது எதுவுமே ராணா போஹாட்டுக்கு தெரியாது. இதனைத் தொடர்ந்து, ஜுன்மோனி ரபா தலைமையிலான தனிப்படை போலீசார் நேற்று ராணா போஹாட்டை அதிரடியாக கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். வருங்கால கணவராக இருந்தவர் மோசடி பேர்வழி என தெரியவந்ததும் அவரை கைது செய்த உதவி ஆய்வாளர் ஜுன்மோனி ரபாவுக்கு காவல் உயரதிகாரிகள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8