படிச்சது லேப் டெக்னீசியன்.. பார்த்தது மருத்துவர் வேலை.. தொக்காக தூக்கிய போலீஸ்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்திருப்பூர் அருகே ஒரு வருட லேப் டெக்னீசியன் படிப்பை முடித்துவிட்டு பொது மருத்துவம் பார்த்து வந்த போலி டாக்டரை காவல்துறை கைது செய்திருக்கிறது.
2 வருஷத்துக்கு பொறியியல் கல்லூரிகள் துவங்க தடை.. AICTE அதிரடி.. என்ன காரணம்?
திருப்பூர் மாவட்டம் அவிநாசி அடுத்த கைகாட்டி அருகே கடந்த இரண்டு வருடங்களாக செயல்பட்டு வருகிறது கேஎஸ் கிளினிக். இந்த கிளினிக்கை புதுக்கோட்டையைச் சேர்ந்த 42 வயதான ஜெயக்குமார் என்பவர் நடத்தி வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் ஜெயக்குமார் மருத்துவம் படிக்காமலேயே பொது மக்களுக்கு மருத்துவம் பார்த்து வருவதாக புகார் எழுந்தது.
இதன் அடிப்படையில் அவிநாசி வட்டார மருத்துவ அலுவலர் சக்திவேல் மற்றும் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சக்தி ஆகியோரது தலைமையிலான அதிகாரிகள் இன்று கேஎஸ் கிளினிக்கிற்கு சென்று ஆய்வு நடத்தினர்.
விசாரணை
இரண்டு ஆண்டுகளாக கிளீனிக்கை நடத்தி வந்த ஜெயக்குமாரிடம் அவரது மருத்துவ கல்வி சான்றிதழ் மற்றும் பதிவு எண் உள்ளிட்ட ஆவணங்களை அதிகாரிகள் கேட்டுள்ளனர். அதற்கு முன்னுக்குப்பின் முரணாக ஜெயக்குமார் பதில் அளித்ததாக தெரிகிறது. இதனால் சந்தேகம் அடைந்த அதிகாரிகள் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். அதன் பலனாக ஜெயக்குமார் ஒரு வருட லேப் டெக்னீசியன் படிப்பை படித்துவிட்டு பொது மருத்துவம் பார்த்து வந்தது தெரிய வந்திருக்கிறது.
சீல்
இதுதொடர்பாக அவிநாசி காவல்துறை மற்றும் தாசில்தார் ராகவி ஆகியோருக்கு மருத்துவ அதிகாரிகள் தகவல் அனுப்பினர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அவினாசி காவல் துறை மற்றும் தாசில்தார் ராகவி அவர்கள் விசாரணையை தொடர்ந்தனர். அதில் ஜெயக்குமார் மருத்துவம் படிக்காமலேயே பொதுமக்களுக்கு மருத்துவம் பார்த்து வந்தது உறுதியான நிலையில் அவிநாசி காவல்துறை ஜெயக்குமாரை கைது செய்திருக்கிறது. மேலும் அனுமதி இன்றி இயங்கி வந்த கேஎஸ் கிளீனிக்கும் தாசில்தார் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது.
ஒரு வருட லேப் டெக்னீசியன் படிப்பை படித்துவிட்டு பொது மக்களுக்கு கடந்த இரண்டு வருடங்களாக மருத்துவம் பார்த்து வந்த போலி டாக்டர் கைதான சம்பவம் அந்த பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
வாத்தி ரைடு... பள்ளி வாகனங்களில் அமைச்சர் அன்பில் மகேஷ் அதிரடி ஆய்வு..!