"வேர்ல்டு முழுக்க இவருக்கு 47 குழந்தைங்க.. ஆனாலும் DATING போக ஒரு பொண்ணு இல்ல.." 30 வயசு இளைஞருக்கு வந்த விநோத சோதனை‌..

முகப்பு > செய்திகள் > உலகம்

By Ajith Kumar V | May 06, 2022 01:35 AM

அமெரிக்காவில் 47 குழந்தைகளின் தந்தையான ஒருவர், எந்த பெண்களும் தன்னுடன் டேட்டிங் வருவதில்லை என வருத்தம் கொண்டுள்ளார்.

Man fathered 47 children struggling to get girl for dating

அமெரிக்காவின் கலிபோர்னியாவைச் சேர்ந்தவர் கைல் கார்டி (வயது 30). ஆனால், தற்போது வரை உலகிலுள்ள மொத்தம் 47 குழந்தைகளின் அப்பாவாகவும் மாறி உள்ளார் கார்டி.

மேலும், கூடிய விரைவில் இன்னும் 10 குழந்தைகளின் தந்தையாகவும் மாற போகிறார் கைல் கார்டி.

கடினமான சூழ்நிலை

இந்த குழந்தைகள் எல்லாமே தன்னுடைய விந்தை கைல் கார்டி தானம் செய்ததன் மூலம் பிறந்த குழந்தைகளாகும். 22 வயது முதல் கடந்த எட்டு ஆண்டுகளாக, விந்து தானம் செய்து வரும் கார்டி, தன்னுடைய இந்த முடிவு குறித்து பெரிய அளவில் வருத்தப்பட்டது கிடையாது. ஆனால், அவரின் இந்த முடிவு, தன்னுடைய வாழ்வில் ஒரு கடினமான சூழ்நிலையை ஏற்படுத்தி உள்ளதாக கைல் கார்டி தற்போது தெரிவித்துள்ளார்.

தான் விந்தணு தானம் செய்ய தொடங்கியதில் இருந்து, பல பெண்களும் கைல் கார்டியை அணுகி வருகிறார்கள். ஆனால், தன்னிடம் பேச வரும் பெண்கள் அனைவரும் குழந்தை பெற்றுக் கொள்வதற்காக மட்டும் தான், தன்னை தொடர்பு கொள்கிறார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

குழந்தைக்காக மட்டும் பேசுறாங்க..

"இரண்டு ஆண்டுகளுக்கு மேல், நான் விந்தணு தானம் கொடுத்த பிறகு தான், என் மீது அதிக கவனம் திரும்பியது. அதன் பின்னர், நான் தீவிரமாக விந்து நன்கொடை கொடுக்க ஆர்மபித்தேன். இதில், பல பெண்கள் ஆர்வமாக இருப்பார்கள் என நான் நினைத்துக் கூட பார்க்கவில்லை. அதிலும் பெரும்பாலானோர், அதிக பணம் உடையவர்களாக உள்ளதால், எந்த விந்தணு வங்கிக்கு வேண்டுமானாலும் செல்ல முடியும்.

ஆனாலும், பலர் என்னைத் தேடி வருகிறார்கள். அப்படி இருந்தும், யாரும் என்னுடன் டேட்டிங் செய்ய விரும்புவதில்லை. என்னுடைய வாழ்க்கை தேவைகளை ஏற்றுக் கொண்டு, ஒரு குடும்பத்தை என்னுடன் தொடங்க சிறந்த ஒருவர் தேவை" என தெரிவித்துள்ளார்.

சிறந்த உணர்வு..

மேலும், "பல பெண்கள் தங்களின் குடும்பத்தை தொடங்க நான் உதவுவதால், மிகுந்த மகிழ்ச்சியாக நான் உணர்கிறேன். உலகின் சிறந்த உணர்வுகளில் இதுவும் ஒன்று. என்னுடைய குழந்தைகளின் புகைப்படங்களை அவ்வப்போது நான் காண முடியும் என்பதால், அவர்கள் எப்படி இருக்கிறார்கள் என்பதையும் தொடர்ந்து என்னால் அறிந்து கொள்ள முடிகிறது" என கைல் தெரிவித்துள்ளார்.

அதே போல, தன்னுடைய குழந்தைகள் அனைவரையும் காண வேண்டி, ஒவ்வொரு நாடாக கைல் கார்டி விசிட் அடித்து, குழந்தைகளுடன் நேரம் செலவிட்டு வருவதாகவும் தகவல்கள் குறிப்பிடுகின்றது.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க்.. https://behindwoods.com/bgm8

Tags : #SPERM DONOR #CHILDREN #KYLE GORDY

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Man fathered 47 children struggling to get girl for dating | World News.