'நவம்பர் 30' தான் கடைசி நாள்... சோகத்தில்.. பெண் இன்ஜினீயர் எடுத்த 'விபரீத' முடிவு!
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Manjula | Nov 20, 2019 07:42 PM
வேலையிழந்த சோகத்தில் பெண் இன்ஜினியர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஹைதராபாத் பகுதியில் உள்ள நிறுவனம் ஒன்றில் ஜூனியர் தகவல் தொழில்நுட்ப வல்லுனராக வேலை செய்துவந்த போகு ஹரிணி (24) என்னும் பெண் இன்ஜினியர், நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு தன்னுடைய விடுதியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுதொடர்பாக தகவல் கிடைத்து வந்த போலீசார் ஹரிணி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதில் தெலுங்கானா மாநிலம் மஹாபூப் என்னும் பகுதியை சேர்ந்த ஹரிணி ஹைதராபாத் பகுதியில் தங்கி அங்குள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றில் வேலைபார்த்து வந்துள்ளார்.
இந்தநிலையில் அவரது கம்பெனியில் திடீரென ஹரிணியை வேலையை விட்டு நீக்கியுள்ளனர். நவம்பர் 30-ம் தேதி தான் தனக்கு கம்பெனியில் கடைசி வேலை நாள் என்பதை அறிந்த ஹரிணி மிகுந்த மன உளைச்சலுடன் காணப்பட்டுள்ளார். இதுவே அவரது தற்கொலைக்கு காரணமாக இருக்கலாம் என கருதப்படுகிறது.
எனினும் போலீசார் வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்ற ரீதியிலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.