நிவர் புயலால் ஏற்படும் ‘சூறாவளி’.. இந்த 9 மாவட்டங்களில் ‘அதிக சேதம்’ ஏற்பட வாய்ப்பு.. வானிலை மையம் தகவல்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்நிவர் புயலால் சூறாவளி காற்று வீசினால் சென்னை உட்பட 9 மாவட்டங்களில் அதிக சேதம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் உருவாகி உள்ள நிவர் புயல் காரணமாக தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. நாளை காரைக்கால்-மகாபலிபுரம் இடையே நிவர் புயல் கரையை கடைக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலில் தீவிரப் புயலாகவே கரையை கடக்கும் என கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது அதி தீவிர புயலாக மாற வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
மணிக்கு 110 கிலோமீட்டர் வேகத்தில் காற்றுடன் புயல் கரையை கடக்கும் என கூறப்பட்ட நிலையில், காற்றின் வேகம் 145 கிலோமீட்டர் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. இதனால் நாளை தமிழகம் முழுவதும் அரசு விடுமுறையை முதல்வர் பழனிசாமி அறிவித்தார். மேலும் மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தியுள்ளார்.
இந்தநிலையில் நிவர் புயலால் ஏற்படும் சூறாவளி காற்றினால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், நாகை, மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், திருவாரூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் அதிக சேதம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.