‘தமிழகத்தில் இன்றைய (23-11-2020) கொரோனா பாதிப்பு அப்டேட்’... ‘குணமடைந்தவர்கள் எத்தனை பேர்?... சென்னை நிலவரம் என்ன???...
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் இன்று 1,624 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. சென்னையில் மட்டும் 483 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று சென்னை உள்ளிட்ட 37 மாவட்டங்களில் கொரோனா தொற்று எண்ணிக்கை வந்துள்ளது. சென்னையைத் தவிர 36 மாவட்டங்களில் 1,141 பேருக்குத் தொற்று உள்ளது.
இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை, நிலை குறித்து இன்று பொது சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு:
* தனிமைப்படுத்துதலில் உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 12,245.
* மொத்தம் எடுக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 1,16,06,250.
* இன்று ஒரு நாளில் எடுக்கப்பட்ட சோதனை மாதிரி எண்ணிக்கை 65,012.
* மொத்தம் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கை 7,71,619.
* இன்று தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 1,624.
* சென்னையில் தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 483.
* மொத்தம் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கையில் ஆண்கள் 4,66,167 பேர். பெண்கள் 3,05,419 பேர். மூன்றாம் பாலினத்தவர் 33 பேர்.
* தொற்று உறுதியானவர்களில் ஆண்கள் 958 பேர். பெண்கள் 666 பேர்.
* இன்று டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 1,904 பேர். மொத்தம் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 7,47,752 பேர்
* இன்று கொரோனா வைரஸ் நோய்த் தொற்றினால் 17 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 9 பேர் தனியார் மருத்துவமனையிலும், 8 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர்.
இதில் சென்னையில் இன்று 6 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை 11,622 ஆக உள்ளது. இதுவரை சென்னையில் மொத்தம் 3,822 பேர் உயிரிழந்துள்ளனர்.
முக்கியப் பிரச்சினையாக சுவாசப் பிரச்சினை, மாரடைப்பு, கோவிட் நிமோனியா ஆகியவை அதிக அளவு மரணத்துக்குக் காரணமாக உள்ளன. நீண்டகால நோயால் பாதிக்கப்பட்டிருந்தவர்கள் 16 பேர். எவ்விதப் பாதிப்பும் இல்லாதவர் ஒருவர். இவ்வாறு பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மற்ற செய்திகள்
