ரூ.500 பில்லுக்கு... ரூ.2 லட்சம் டிப்ஸ் கொடுத்த நபர்!!.. 'யார் சாமி இவரு'!?.. கதிகலங்கிப் போன ஊழியர்கள்!
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்காவை சேர்ந்த நபர் ஒருவர் 500 ரூபாய் பீர் வாங்கி விட்டு 2 லட்சம்

ரூபாய் டிப் கொடுத்த சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த உணவகம் ஒன்று, கொரோனா பாதிப்பு காரணமாக உணவகத்தை மூட முடிவெடுத்தது. இதனால் தினமும் அந்தக் கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் வருத்தமடைந்தனர்.
வேலை இல்லாமல் என்ன செய்வதென தெரியாமல் விழி பிதுங்கி நின்ற ஊழியர்களுக்கு வியப்பை ஏற்படுத்தும் வகையில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. உணவகத்திற்கு வந்த வாடிக்கையாளர் ஒருவர் பீர் ஒன்றை ஆர்டர் செய்துள்ளார்.
இதன் விலை 7.02 டாலர். அதாவது இந்திய மதிப்பில் ரூ.500. அவர் பணத்தை வைத்து விட்டு ஊழியர்களிடம் அதனை பிரித்து எடுத்துக் கொள்ளுமாறு கூறியுள்ளார்.
அதனை திறந்து பார்த்த போது, அதில் சுமார் 2 லட்சம் ரூபாய்க்கான காசோலை
இருந்துள்ளது. உடனடியாக அவரிடம் ஓடிச் சென்று கேட்ட போது, தெரிந்தேதான் அந்தப் பணத்தை கொடுத்ததாக கூறியுள்ளார். கடையை மீண்டும் திறக்கும் போது சந்திப்போம் எனக் கூறி சென்றுள்ளார்.
அவருக்கு கடை ஊழியர்கள் ஆனந்தக் கண்ணீருடன் நன்றி தெரிவித்துள்ளனர். இதுதொடர்பான தகவல்கள் சமூக வலைதளங்களில் வெளியானதையடுத்து பலரும் அவருக்கு பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

மற்ற செய்திகள்
