‘பெட்ரூமில் லேப்டாப்பை வைத்திருந்ததால்’.. வீடு வாசல் அனைத்தையும் இழந்து ‘தவிக்கும்’ குடும்பம்! ‘அப்படி என்னதான் நடந்தது?’
முகப்பு > செய்திகள் > உலகம்பிரிட்டனில் படுக்கை அறையில் லேப்டாப்பை வைத்து இருந்ததால் ஒரு குடும்பம் தங்களுக்கு சொந்தமான அத்தனை சொத்துக்களையும் இழந்து தெருவுக்கு வரும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

பிரிட்டனில் லிவர்பூல் பகுதியில் Rebacca என்பவரின் படுக்கையறையில் இருந்து ஏதோ சத்தம் கேட்டுள்ளது. மகளின் படுக்கை அறையில் இருந்து இவ்வாறு சத்தம் வருவதை கவனித்த Joanne Bresnahan அங்கு விரைந்து சென்று பார்த்தபோது அறை முழுதும் தீப்பற்றி எரிவதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
உடனே வாளிகளில் தண்ணீரை எடுத்துக் கொண்டு தீயை அணைக்க முயன்றுள்ளார். ஆனால் அதற்குள் நிலைமை கை மீறிப் போகவே வீடு முழுவதும் தீப்பற்றி அனைத்தும் எரிந்து நாசமாகியது. படுக்கை அறையில் வைக்கப்பட்டிருந்த லேப்டாப்பில் பிடித்த தீ தான் வீடு முழுவதும் இப்படி கபளீகரம் செய்துவிட்டது.
அண்மையில்தான் Rebacca-வின் மூளையில் ஏற்பட்ட புற்று நோயை அகற்ற பெரும் செலவு செய்தது Joanne-வின் குடும்பம். தற்போது லாப்டாப்பினால் வீடு முழுவதும் எரிந்து போனதால் பொதுமக்களின் உதவியை கேட்கும் நிலைமை இக்குடும்பத்துக்கு உண்டாகியுள்ளது.
தங்கள் உடைமைகள் அனைத்தையும் இழந்த இந்த குடும்பம், மீண்டும் தங்கள் வீட்டை சீரமைத்து குடியேற 9 மாதங்கள் வரை ஆகலாம் என்றும் கூறப்படுகிறது.

மற்ற செய்திகள்
