வாயை பிளந்து பார்க்க வச்ச ‘மதுரைக்காரர்’.. மாஸ்க் மட்டுமே இத்தனை பவுனா..? வைரலாகும் போட்டோ..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக மதுரையை சேர்ந்த முன்னாள் ரவுடி தங்கத்தில் முகக்கவசம் அணிந்து வரும் சம்பவம் வைரலாகி வருகிறது.

மதுரை-சிவகங்கை சாலையில் அமைந்துள்ள வரிச்சூர் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வம். இவர் ஒரு காலத்தில் மதுரையில் பிரபல ரவுடியாக வலம் வந்ததாக கூறப்படுகிறது. அதனால் இவரை ‘வரிச்சூர் செல்வம்’ என பலரும் அழைத்து வந்துள்ளனர். தற்போது குற்றச் செயல்களில் ஈடுபடாமல் குடும்பத்துடன் வரிச்சூர் செல்வம் அமைதியாக வாழ்ந்து வருவதாக சொல்லப்படுகிறது.
தான் எப்போதும் தனித்து தெரிய வேண்டும் என்பதற்காக தங்க நகைகளை அதிகமாக அணிவதில் அலாதியான பிரியம் வைத்துள்ளார். அதனால் சுமார் 300 பவுன் தங்க நகைகளை அணிந்துதான் வெளியே வலம் வருகிறார். இந்த நிலையில் கொரோனா நோய்த்தொற்று பரவி வரும் நிலையில், மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வித்தியாசமான முயற்சியை அவர் மேற்கொண்டுள்ளார்.
அதன்படி துணியாலான முகக்கவசம் அணியாமல் தங்கத்தாலான முகக்கவசம் அணிந்து வருகிறார். இதற்காக சுமார் 10 பவுனில் பிரத்யேகமாக தங்க முகக்கவசம் செய்துள்ளார். இதுகுறித்து தெரிவித்த அவர், ‘தங்கத்தின் மீது எனக்கு அலாதியான பிரியம் உண்டு. மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவே நான் தங்க முகக்கவசம் அணிந்து வருகிறேன். துணியால் அணிவதை விட தங்கத்தால் முகக்கவசம் அணிவது மக்கள் மத்தியில் அதிகமாக விழிப்புணர்வை ஏற்படுத்தும்’ என வரிச்சூர் செல்வம் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் தங்கத்திலான முகக்கவசத்துடன் இருக்கும் அவரது புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மற்ற செய்திகள்
