அப்போ 'அது' கன்ஃபார்ம் தானா...? 'போடுறா வெடிய...' - 'வேற லெவல்' கொண்டாட்டத்தில் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள்...!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் விளையாடவிருக்கும் இந்திய அணியின் புது உடையை ஷிகர் தவன் தன் ட்விட்டரில் பதிவேற்றியுள்ளார்.
![Shikhar Dhawan revealed the new jersey of the Indian team Shikhar Dhawan revealed the new jersey of the Indian team](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/sports/shikhar-dhawan-revealed-the-new-jersey-of-the-indian-team.jpg)
இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள், டி-20 போட்டிகளில் விளையாட ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த ஒருநாள் தொடர் நவம்பர் 27-லிலும் டி20 தொடர் டிசம்பர் நான்கிலும் டெஸ்ட் தொடர் டிசம்பர் 17-லிலும் தொடங்குவதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இந்த டி-20 தொடர் முழுவதும் இந்திய கிரிக்கெட் வீரர்கள் புதிய வடிவமைப்பிலான உடையை அணிந்து விளையாடவுள்ளார்கள். அந்த உடையின் புகைப்படத்தை இந்திய அணியின் தொடக்க வீரர் ஷிகர் தவன் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார். தற்போது இந்த புகைப்படமானது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
New jersey, renewed motivation. Ready to go. 🇮🇳 pic.twitter.com/gKG9gS78th
— Shikhar Dhawan (@SDhawan25) November 24, 2020
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
மற்ற செய்திகள்
![](https://www.behindwoods.com/images/spacer.gif)