'50 சதவீத விலையில்’... ‘இன்னும் 2 மாதங்களில் கிடைக்கப் போகும்’... ‘கொரோனா தடுப்பூசி மருந்து’... ‘வெளியான நம்பிக்கை தகவல்’...!
முகப்பு > செய்திகள் > இந்தியாஜனவரி அல்லது பிப்ரவரி மாதத்தில் பாதிவிலையில் ஆக்ஸ்ஃபோர்டு தடுப்பூசி கிடைக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.

உலகை இன்றளவும் அச்சுறுத்தி வருகிற கொரோனா வைரசை தடுத்து நிறுத்துவதற்காக இந்தியா உள்ளிட்ட முன்னணி நாடுகள் பலவும் தடுப்பூசிகளை உருவாக்கி அவற்றை மனிதர்களுக்கு செலுத்தி சோதித்து வருகின்றன.
அந்த வகையில் இங்கிலாந்து நாட்டின் பிரபல ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும், அஸ்ட்ரா ஜெனேகா என்ற மருந்து நிறுவனமும் இணைந்து கூட்டாக கோவிஷீல்டு என்ற தடுப்பூசியை உருவாக்கி உள்ளன. இந்தியாவில் இந்த தடுப்பூசியை புனேயை சேர்ந்த சீரம் இன்ஸ்டிடியுட் தயாரித்து, வினியோகிக்கும் உரிமையை பெற்றுள்ளது.
இந்நிலையில், ஆக்ஸ்ஃபோர்டு கோவிஷீல்டு மருந்து ஜனவரி அல்லது பிப்ரவரி மாதத்தில், 50 சதவீத விலையில் கிடைக்கும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, சீரம் நிறுவனத்துக்கு இந்த மருந்து இரண்டு மாதங்களில் கிடைக்கலாம் என்றும் நிர்ணயிக்கப்பட்ட விலையான 500 அல்லது 600 ரூபாயில் இந்தியாவுக்கு பாதி விலையில் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.
மார்ச்-ஏப்ரல் 2021-க்குள் கோவிஷீல்டு மக்களுக்கு கிடைக்க வாய்ப்புள்ளது என்று சீரம் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி ஆதார் பூனவல்லா தெரிவித்துள்ளார். 2° C முதல் 8° C வரை வெப்பநிலையில் சேமிக்கக்கூடிய இந்த தடுப்பூசி, பொது மக்களுக்கு தனியார் சந்தையில் ரூ .500 முதல் 600 வரை கிடைக்கும் என்று பூனவல்லா கூறி உள்ளார்.

மற்ற செய்திகள்
