"எது, அண்டார்டிகா'ல ஓணமா??".. ஆனந்த் மஹிந்திரா'வையே வியக்க வைத்த வீடியோ.. "அதுக்கு அவரு குடுத்த கேப்ஷன் தான்"..
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்தியாவின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவரான ஆனந்த் மஹிந்திரா, தொழிலில் ஒரு பக்கம் எந்த அளவுக்கு தீவிரமாக இயங்கி வருகிறாரோ, அதே அளவில் ட்விட்டரிலும் ஆக்கப் பூர்வமாக இயங்கக் கூடியவர்.
அடிக்கடி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், இணையவாசிகளுக்கு தேவையான தொழில் மற்றும் டெக்னாலஜி தொடர்பான செய்திகள் மற்றும் வீடியோக்கள், தங்களின் திறனை வெளிப்படுத்தி புது விதமான முயற்சிகளை மேற்கொள்ளும் வீடியோக்கள், நெட்டிசன்கள் கேட்கும் கேள்விகளுக்கு பயன்படும் வகையில் தனது பதில்களை தெரிவித்து வருவதை ஆனந்த் மஹிந்திரா வழக்கமாக கொண்டுள்ளார்.
இவற்றுள் குறிப்பாக, அடையாளம் தெரியாத நபராக இருந்தாலும், அவர்களின் அசாத்திய திறனை பாராட்டும் வகையில், ஆனந்த் மஹிந்திரா அடிக்கடி செய்யும் ட்வீட்கள், சம்மந்தப்பட்ட நபரை மக்கள் மத்தியில் அதிகம் பாராட்டுக்களையும் பெறச் செய்யும்.
அந்த வகையில், தற்போது ஓண பண்டிகை தொடர்பாக ஆனந்த் மஹிந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள வீடியோ ஒன்று, இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.
உலகெங்கிலுமுள்ள மலையாளிகளால் ஓணம் பண்டிகை மிகவும் விமரிசையாக கொண்டாப்படுவதாகும். அத்தப் பூ கோலம் போட்டு, புத்தாடைகள் உடுத்து ஒண தினத்தன்று சிறப்பாக கொண்டாடுவார்கள். கடந்த சில தினங்களுக்கு முன்பாக தான் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டிருந்தது. அப்படி ஒரு சூழ்நிலையில், அண்டார்டிகாவில் சில ஆண்கள் இணைந்து ஐஸ் மீது ரங்கோலியை வரைகின்றனர். மிகவும் கவனமாக, சுத்தியல் உள்ளிட்ட பொருட்களை கொண்டு, மெல்ல ஐஸ் மீது சுரண்டி சுரண்டி அதனை அழகாக வடிவமைத்துள்ளனர்.
மேலும், கடைசியில் அண்டார்டிகாவில் ஓணம் என்றும் ரங்கோலி கோலத்துடன் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இது தொடர்பான வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த ஆனந்த் மஹிந்திரா, "அண்டார்டிகாவில் கூட இந்தியர்கள் ஓணம் கொண்டாடுவதை உங்களால் தடுக்க முடியாது. Outstanding" என குறிப்பிட்டுள்ளார்.
அண்டார்டிகாவில் கூட ஓணம் பண்டிகையை கொண்டாட முடியும் என்பதை குறிப்பிட்டு, ஆனந்த் மஹிந்திரா பகிர்ந்த வீடியோ, நெட்டிசன்கள் பலரது பாராட்டுக்களையும் பெற்று வருகிறது.
You cannot prevent Indians from celebrating Onam. Even in Antarctica. Outstanding. 👏🏽👏🏽👏🏽 pic.twitter.com/JH2jTeCDQ2
— anand mahindra (@anandmahindra) September 21, 2022
Also Read | ராணி எலிசபெத் மறைவதற்கு ஐந்து நாட்கள் முன்பு.. நண்பரிடம் பகிர்ந்து கொண்ட விஷயம்!!