"47 வருசத்துக்கு முன்னாடி ஆனந்த் மஹிந்திரா எடுத்த ஃபோட்டோ.. இந்த காலத்துக்கு கூட கனெக்ட் பண்ணி அவரு குடுத்த கேப்ஷன் தான் ஹைலைட்டே!!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்தியாவின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவரான ஆனந்த் மஹிந்திரா, தொழிலில் ஒரு பக்கம் எந்த அளவுக்கு தீவிரமாக இயங்கி வருகிறாரோ, அதே அளவில் ட்விட்டரிலும் ஆக்கப் பூர்வமாக இயங்கக் கூடியவர்.

அடிக்கடி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், இணையவாசிகளுக்கு தேவையான தொழில் மற்றும் டெக்னாலஜி தொடர்பான செய்திகள் மற்றும் வீடியோக்கள், தங்களின் திறனை வெளிப்படுத்தி புது விதமான முயற்சிகளை மேற்கொள்ளும் வீடியோக்கள், நெட்டிசன்கள் கேட்கும் கேள்விகளுக்கு பயன்படும் வகையில் தனது பதில்களை தெரிவித்து வருவதை ஆனந்த் மஹிந்திரா வழக்கமாக கொண்டுள்ளார்.
இவற்றுள் குறிப்பாக, அடையாளம் தெரியாத நபராக இருந்தாலும், அவர்களின் அசாத்திய திறனை பாராட்டும் வகையில், ஆனந்த் மஹிந்திரா அடிக்கடி செய்யும் ட்வீட்கள், சம்மந்தப்பட்ட நபரை மக்கள் மத்தியில் அதிகம் பாராட்டுக்களையும் பெறச் செய்யும்.
இந்நிலையில், கடந்த 47 ஆண்டுகளுக்கு முன், தான் ஸ்பெயினில் எடுத்த புகைப்படம் ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள ஆனந்த் மஹிந்திரா, அதற்கு கொடுத்துள்ள கேப்ஷனும் தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.
கடந்த 1975 ஆம் ஆண்டு, ஸ்பெயின் நாட்டின் Toledo என்னும் பகுதியில் தான் எடுத்த புகைப்படம் ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் ஆனந்த் மஹிந்திரா பகிர்ந்துள்ளார். கருப்பு வெள்ளை புகைப்படமான அதில், ஒரு சில ஆட்கள் மாறி மாறி பேசிக் கொண்டிருக்கிறார்கள். மிகவும் அரிய ஒரு புகைப்படத்தை பகிர்ந்த ஆனந்த் மஹிந்திரா, அசத்தலான கேப்ஷன் ஒன்றையும் அதற்கு கொடுத்துள்ளார்.
"1975 ஆம் ஆண்டு, ஸ்பெயினில் உலா Toledo என்னும் பகுதியில், போட்டோஃகிராபி ப்ராஜக்ட் ஒன்றிற்காக மாணவனாக இதனை எடுத்திருந்தேன். 5G நெட்வொர்க்குகள் இன்று உலகம் முழுவதும் பரவி வரும் நிலையில், மிகவும் ஆற்றல் உடைய தகவல் தொடர்பு நெட்வொர்க் என்பது, வாய் வார்த்தையாக தான் இருக்கும் என்பதை இந்த புகைப்படம் எனக்கு நினைவூட்டியது" என குறிப்பிட்டுள்ளார்.
47 ஆண்டுகளுக்கு முன் தான் எடுத்த கருப்பு வெள்ளை புகைப்படம் ஒன்றை பகிர்ந்து, அதனை இன்றைய காலத்துடன் ஒப்பிட்டு ஆனந்த் மஹிந்திரா கொடுத்துள்ள கேப்ஷனும் தற்போது நெட்டிசன்கள் பலரை வெகுவாக கவர்ந்துள்ளது.

மற்ற செய்திகள்
