"நாம எல்லோரும் நம்ம குடும்பத்துக்கு கடமைப்பட்டிருக்கோம்.. இதை செய்ய மறக்காதீங்க".. ஆனந்த் மஹிந்திராவின் உருக்கமான ட்வீட்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்திய பணக்காரர்களுள் ஒருவரும் தொழிலதிபருமான ஆனந்த் மஹிந்திரா உருக்கமான பதிவு ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.

Also Read | பிரிட்டன் பிரதமர் தேர்தல்.. வெளியானது வாக்கு எண்ணிக்கை முடிவுகள்.. முழு விபரம்.!
சைரஸ் மிஸ்திரி
டாடா குழுமத்தின் முன்னாள் தலைவராக இருந்தவர் சைரஸ் மிஸ்திரி. லண்டனின் புகழ்பெற்ற இம்பீரியல் கல்லூரியில் படித்தவரான இவர் முதலில் தனது குடும்பத்தாரின் பாரம்பரிய தொழிலான கட்டுமான பணிகளை கண்காணித்துவந்தார். அதன்பிறகு டாடா குழுமத்தில் இணைந்தார். படிப்படியாக முன்னேறிய மிஸ்திரி 2012 ஆம் ஆண்டு டாடா குழுமத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
Credit : aljazeera
நான்கு ஆண்டுகள் அந்த பணியில் இருந்த இவர் 2016 ஆம் ஆண்டு பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டார். இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை மகாராஷ்டிராவின் பால்கர் மாவட்டத்தில் சரோட்டி அருகே நேர்ந்த சாலை விபத்தில் மிஸ்திரி மரணமடைந்தார். காரில் பயணித்தபோது மிஸ்திரி சீட்பெல்ட் அணியவில்லை எனவும் தகவல்கள் வெளியானது. இந்நிலையில், அனைவரும் பயணத்தின்போது அவசியமாக சீட்பெல்ட் அணியவேண்டும் என இந்திய பணக்காரர்களில் ஒருவரும் தொழிலதிபருமான ஆனந்த் மஹிந்திரா வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
ஆனந்த் மஹிந்திரா
மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் துடிப்புடன் இயங்கி வருபவர். இணைய வெளிகளில் தான் சந்திக்கும் மனிதர்களிடையே பன்முக திறமை கொண்டவர்களையும், கடின உழைப்பாளிகளையும் கண்டறிந்து அவர்களுக்கான அங்கீகாரம் வழங்குவதை ஆனந்த் மஹிந்திரா தொடர்ந்து செய்துவருகிறார். அதேபோல தன்னை ஈர்க்கும் விஷயங்கள் குறித்தும் இணைய வெளிகளில் பதிவிடுவது இவரது வழக்கமாகும். இதன் காரணமாக சமூக வலை தளங்கள் வாயிலாக இவரை 9.6 மில்லியன் மக்கள் பின்தொடர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், ஆனந்த் மஹிந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில்,"காரின் பின் இருக்கையில் இருக்கும் போது கூட எப்போதும் சீட் பெல்ட்டை அணிய முடிவு செய்திருக்கிறேன். மேலும் அந்த உறுதிமொழியை உங்கள் அனைவரையும் ஏற்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நாம் அனைவரும் நம்முடைய குடும்பங்களுக்கு கடமைப்பட்டுள்ளோம்" எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த ட்வீட் தற்போது வைரலாக பரவி வருகிறது.
Also Read | செங்குத்தான ராட்டினத்தில் ஜாலி ரைடு போன மக்கள்.. கொஞ்ச நேரத்துல நடந்த சம்பவம்.. பதறிப்போன அதிகாரிகள்..!

மற்ற செய்திகள்
