"நீங்க மரங்களை வெட்டணும்ன்னு நெனச்சா".. ஆனந்த் மஹிந்திரா பகிர்ந்த வைரல் வீடியோ.. "KARMA'னா இதான் போல"
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்தியாவின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவரான ஆனந்த் மஹிந்திரா, தொழிலில் ஒரு பக்கம் எந்த அளவுக்கு தீவிரமாக இயங்கி வருகிறாரோ, அதே அளவில் ட்விட்டரிலும் ஆக்கப் பூர்வமாக இயங்கக் கூடியவர்.

Also Read | "ஈ தொல்லையால் அல்லல்படுறோம்.. ஒரு டீ கூட குடிக்க முடியல".. தமிழ்நாட்டுல 'ஈ'ப்படி ஒரு கிராமமா?
அடிக்கடி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், இணையவாசிகளுக்கு தேவையான தொழில் மற்றும் டெக்னாலஜி தொடர்பான செய்திகள் மற்றும் வீடியோக்கள், தங்களின் திறனை வெளிப்படுத்தி புது விதமான முயற்சிகளை மேற்கொள்ளும் வீடியோக்கள், நெட்டிசன்கள் கேட்கும் கேள்விகளுக்கு பயன்படும் வகையில் தனது பதில்களை தெரிவித்து வருவதை ஆனந்த் மஹிந்திரா வழக்கமாக கொண்டுள்ளார்.
இவற்றுள் குறிப்பாக, அடையாளம் தெரியாத நபராக இருந்தாலும், அவர்களின் அசாத்திய திறனை பாராட்டும் வகையில், ஆனந்த் மஹிந்திரா அடிக்கடி செய்யும் ட்வீட்கள், சம்மந்தப்பட்ட நபரை மக்கள் மத்தியில் அதிகம் பாராட்டுக்களையும் பெறச் செய்யும். அந்த வகையில், தற்போது மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அவர் பகிர்ந்துள்ள வீடியோ ஒன்று அதிகம் வைரலாகி வருகிறது.
இன்று உலகிலுள்ள பல இடங்களில், இயற்கை வளங்களான மரங்கள் மற்றும் காடுகள் உள்ள பகுதிகளை மக்கள் அழித்து அவற்றை வீடுகளாகவும், கட்டிடங்கள் உள்ள பகுதிகளாகவும் மாற்றி வருகின்றனர். இதன் காரணமாக, பருவநிலை மாற்றமும் பல இடங்களில் நீர் தட்டுப்பாடு என பல விஷயங்கள் அரங்கேறி, மக்களும் மிகுந்த வறட்சி மூலம் பாதிக்கப்பட்டு வருகின்றனர். நாம் காடுகள் மற்றும் இயற்கை வளங்களை பாதுகாக்காமல் போனால், அவை நம்மை இது போல பழி வாங்க தான் செய்யும் என்றும் ஏரளாமானோர் குறிப்பிட்டு வருகின்றனர்.
அந்த வகையில், தற்போது ஆனந்த் மஹிந்திரா பகிர்ந்துள்ள வீடியோவும், இதனை எடுத்துரைக்கும் வகையில் தான் உள்ளது. ஆனந்த் மஹிந்திரா பகிர்ந்த வீடியோவில் மூன்று பேர் சேர்ந்து, ஒரு மரத்தை வெட்டுகின்றனர். அவர்கள் மரத்தை முழுவதும் வெட்டி முடித்த பிறகு, அதனை சற்று தள்ளியும் விடுகின்றனர். உடனடியாக, சரிந்து போகும் அந்த மரம், அங்குள்ள மற்ற மரங்களின் கிளைகள் பட்டு மூன்று பேர் நின்ற இடம் நோக்கியும் வருகின்றது.
அப்படி இருக்கும் நிலையில், அந்த மூவரும் எதிர்பாராத வகையில் ஒரு சம்பவம் அங்கே அரங்கேறியது. அதில் ஒருவரை அலேக்காக தூக்கிய அந்த மரம், கீழே விழும் வேகத்தில் அவரையும் தூக்கி தள்ளி போடுகிறது.
இந்த வீடியோவை பகிர்ந்த ஆனந்த் மஹிந்திரா, நீங்கள் மரங்களை வெட்டினால் இப்படி தான் நடக்கும் என்பது போல கேப்ஷனில் குறிப்பிட்டுள்ளார். மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ஆனந்த் மஹிந்திரா பகிர்ந்த இந்த வீடியோ, நெட்டிசன்கள் பலரையும் வெகுவாக கவர்ந்துள்ளது.
If you cut down trees, they won’t take it lying down 👏🏽👏🏽👏🏽pic.twitter.com/TekNZiQSTF
— anand mahindra (@anandmahindra) August 23, 2022

மற்ற செய்திகள்
