உலகத்துலயே பெஸ்ட்.. "இவரு தான்யா CAPTAIN COOL".. டிரைவரை தாறுமாறாக பாராட்டிய ஆனந்த் மஹிந்திரா.. "அப்படி என்ன அவரு பண்ணாரு??"
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்தியாவின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவரான ஆனந்த் மஹிந்திரா, தொழிலில் ஒரு பக்கம் எந்த அளவுக்கு தீவிரமாக இயங்கி வருகிறாரோ, அதே அளவில் ட்விட்டரிலும் ஆக்கப் பூர்வமாக இயங்கக் கூடியவர்.
Also Read | "இலங்கை ஆசிய கோப்பை ஜெயிச்சதுக்கு".. CSK'வும் ஒரு காரணமா??.. இலங்கை கேப்டன் சொன்ன விஷயம்!..
அடிக்கடி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், இணையவாசிகளுக்கு தேவையான தொழில் மற்றும் டெக்னாலஜி தொடர்பான செய்திகள் மற்றும் வீடியோக்கள், தங்களின் திறனை வெளிப்படுத்தி புது விதமான முயற்சிகளை மேற்கொள்ளும் வீடியோக்கள், நெட்டிசன்கள் கேட்கும் கேள்விகளுக்கு பயன்படும் வகையில் தனது பதில்களை தெரிவித்து வருவதை ஆனந்த் மஹிந்திரா வழக்கமாக கொண்டுள்ளார்.
இவற்றுள் குறிப்பாக, அடையாளம் தெரியாத நபராக இருந்தாலும், அவர்களின் அசாத்திய திறனை பாராட்டும் வகையில், ஆனந்த் மஹிந்திரா அடிக்கடி செய்யும் ட்வீட்கள், சம்மந்தப்பட்ட நபரை மக்கள் மத்தியில் அதிகம் பாராட்டுக்களையும் பெறச் செய்யும்.
அந்த வகையில், தற்போது ஆனந்த் மஹிந்திரா பகிர்ந்துள்ள வீடியோ ஒன்று, இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.
கர்நாடக மாநிலத்தின் காபினி என்னும் காட்டுப் பகுதியில், வாகனம் ஒன்று சென்று கொண்டிருக்கும் வேளையில் திடீரென குறுக்கே ஒரு யானை வந்து நிற்கிறது. அது மட்டுமில்லாமல், வேகமாக வாகனத்தை துரத்த ஆரம்பிக்கவும் செய்கிறது. இதனைக் கண்டதும் அந்த ஜீப்பை ஓட்டிக் கொண்டு செல்லும் நபர், கொஞ்சம் கூட பதற்றப்படாமல் வண்டியே ரிவர்ஸில் செலுத்தி கொண்டே இருக்கிறார்.
மறுபக்கம் பிளிறிக் கொண்டே யானை ஓடி வந்து கொண்டே இருக்க, ரிவர்ஸில் வாகனமும் வேகமாக சென்று கொண்டிருக்கிறது. இறுதியில், யானை ஒரு இடத்தில் நின்று காட்டுப் பக்கம் செல்கிறது. இது தொடர்பான வீடியோவை ஆனந்த் மஹிந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
மேலும் தனது கேப்ஷனில், "இது கபினி காட்டுப் பகுதியில் கடந்த வியாழன் நடந்தது. மேலும் இந்த வாகனத்தை ஓட்டியவரை உலகத்தின் சிறந்த Bolero டிரைவர் என மொழிகிறேன். மேலும், இவருக்கு 'கேப்டன் கூல்' என்ற பட்ட பெயரையும் கொடுக்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.
காட்டில் உள்ள யானை ஆக்ரோஷத்துடன் ஓடி வந்த போதும் ஜீப்பில் இருப்பவர்கள் மற்றும் வாகனத்திற்கு எந்தவித பிரச்சனையும் உருவாகாமல் வீரத்துடன் செயல்பட்ட ஓட்டுனரை பலரும் பாராட்டி வருகின்றனர்.
This was apparently at the Kabini Reserve last Thursday. I hereby anoint the man at the wheel as the best Bolero driver in the world & also nickname him Captain Cool. pic.twitter.com/WMb4PPvkFF
— anand mahindra (@anandmahindra) September 12, 2022
Also Read | ராணி எலிசபெத் மறைவு பத்தி.. பல மாதங்கள் முன்பே கணிப்பு.. உலகமே தேடும் இளம் பெண்.. "யாரு தாயி நீ??"