75 வருஷத்துக்கு முன்னாடி எடுக்கப்பட்ட ராணியின் புகைப்படம்.. யப்பா.. இது பொக்கிஷம் போலயே..!
முகப்பு > செய்திகள் > உலகம்75 ஆண்டுகளுக்கு முன்னர் எடுக்கப்பட்ட இரண்டாம் எலிசபெத்தின் புகைப்படத்தை பக்கிங்காம் அரண்மனை வெளியிட்டிருக்கிறது. பல முக்கியத்துவங்களை கொண்ட இந்த புகைப்படம் தற்போது பலராலும் வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.
Also Read | இந்திய ராணுவத்தில் இருந்து விடைபெறும் அபிநந்தனின் மிக் -21 ரக விமான படைப்பிரிவு.. முழு விபரம்..!
இரண்டாம் எலிசபெத்
பிரிட்டனில் ஆறாம் ஜார்ஜ் மன்னர் 1952-ம் ஆண்டு மரணம் அடைந்தபோது ராணியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் இரண்டாம் எலிசபெத். அப்போது அவருக்கு வயது 25. பிரிட்டன் வரலாற்றில் நீண்டகாலம் ராணியாக இருந்த பெருமை இரண்டாம் எலிசபெத்திற்கு உண்டு. அவருடைய ஆட்சிக்காலத்தில் 15 பிரதமர்களுக்கு பதவி பிரமாணம் செய்துவைத்திருக்கிறார். நெடுநாள் ராணியாக பதிவி வகித்த அவர் கடந்த 8 ஆம் தேதி தன்னுடைய 96 வயதில் காலமானார். இந்நிலையில், நேற்று முன்தினம் அவருடைய உடல் நல்லடக்கம் செய்யப்பட்டிருக்கிறது.
புகைப்படம்
இந்நிலையில், இங்கிலாந்தில் உள்ள பக்கிங்காம் அரண்மனை மறைந்த ராணி இரண்டாம் எலிசபெத்தின் பழைய புகைப்படம் ஒன்றை பகிர்ந்திருக்கிறது. இந்த புகைப்படத்தில் எலிசபெத் தனது கணவர் பிலிப், சகோதரி இளவரசி மார்கரட், ராணி எலிசபெத் அவருடைய கணவர் ஆறாம் ஜார்ஜ் ஆகியோருடன் இருக்கிறார். இந்த புகைப்படம் இரண்டாம் எலிசபெத் திருமணமான ஆண்டு வெட்ஸ்மினிஸ்டர் அபேவில் எடுக்கப்பட்டிருக்கிறது. வெட்ஸ்மினிஸ்டர் அபேவில் தான் இரண்டாம் எலிசபெத் - பிலிப் திருமணம் நடைபெற்றது. அதேபோல இங்கேயே ராணியின் முடிசூட்டுவிழாவும் நடைபெற்றிருக்கிறது. கடந்த வாரம் அதே இடத்தில் ராணியின் உடல் மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
பிரிட்டன் அரச குடும்பத்தினரை வழக்கமாக புகைப்படம் எடுக்கும் டோரதி வைல்டிங் என்பவர் தான் இந்த புகைப்படத்தையும் எடுத்திருக்கிறார். இவற்றுள் சில தபால் தலை உருவாக்கத்திற்கு பயன்படுத்தப்பட்டன. டோரதி வைல்டிங்-ன் சகோதரி சூசன் மார்டன் 1976 இல் நன்கொடையாக வழங்கிய இந்தப் படம் இப்போது தேசிய உருவப்படக் கேலரியின் பராமரிப்பில் உள்ளது.
இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் மறைவுக்கு பிறகு பக்கிங்காம் அரண்மனை வெளியிட்டுள்ள இந்த புகைப்படம் தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.