"சோழ சாம்ராஜ்யம் பத்தி இன்னும் நெறைய தெரிஞ்சுக்கணும்" - PS1 பாக்க போறாரா ஆனந்த் மஹிந்திரா..? பரபரப்பு ட்வீட்
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்தியாவின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவரான ஆனந்த் மஹிந்திரா, தொழிலில் ஒரு பக்கம் எந்த அளவுக்கு தீவிரமாக இயங்கி வருகிறாரோ, அதே அளவில் ட்விட்டரிலும் ஆக்கப் பூர்வமாக இயங்கக் கூடியவர்.
Also Read | பூமிக்கு அடியில மர்ம சத்தம்.. அச்சத்தில் கிராமம்.. 9,700 பேர் மரணிக்க காரணமா இருந்த இடமா.?
அடிக்கடி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், இணையவாசிகளுக்கு தேவையான தொழில் மற்றும் டெக்னாலஜி தொடர்பான செய்திகள் மற்றும் வீடியோக்கள், தங்களின் திறனை வெளிப்படுத்தி புது விதமான முயற்சிகளை மேற்கொள்ளும் வீடியோக்கள், நெட்டிசன்கள் கேட்கும் கேள்விகளுக்கு பயன்படும் வகையில் தனது பதில்களை தெரிவித்து வருவதை ஆனந்த் மஹிந்திரா வழக்கமாக கொண்டுள்ளார்.
இவற்றுள் குறிப்பாக, அடையாளம் தெரியாத நபராக இருந்தாலும், அவர்களின் அசாத்திய திறனை பாராட்டும் வகையில், ஆனந்த் மஹிந்திரா அடிக்கடி செய்யும் ட்வீட்கள், சம்மந்தப்பட்ட நபரை மக்கள் மத்தியில் அதிகம் பாராட்டுக்களையும் பெறச் செய்யும்.
அந்த வகையில், தற்போது சோழ பேரரசு குறித்து ஆனந்த் மஹிந்திரா தனது ட்வீட்டில் குறிப்பிட்டுள்ள விஷயம் இணையத்தில் அதிக அளவில் வைரலாகி வருகிறது.
பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாக கொண்டு இயக்குனர் மணிரத்னம், பொன்னியின் செல்வன் திரைப்படத்தை இரண்டு பாகங்களாக இயக்கி வருகிறார். இந்த படத்தில் சியான் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உள்ளிட்ட ஏரளாமானோர் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரெயிலர் ஏற்கனவே வெளியாகி இருந்த நிலையில், பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம், செப்டம்பர் 30 ஆம் தேதியன்று வெளியாக உள்ளது.
சோழ மன்னர்கள் ஆண்டது பற்றிய அடிப்படை தான் பொன்னியின் செல்வன் நாவல். ஒரு காலத்தில் உலகின் ஏராளமான பகுதிகளில் சாம்ராஜ்யம் நடத்திய சோழ மன்னர்களின் வீர வரலாறு என்பது இன்றும் பலரை மெய் சிலிர்க்க வைக்கும் வகையில் இருக்கும். அந்த வகையில், இணையத்தில் சோழ பேரரசு பற்றி நிறைய பதிவுகளை பார்த்த ஆனந்த் மஹிந்திரா, இது தொடர்பாக ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.
அந்த பதிவில், "துருதிர்ஷ்டவசமாக பிரிட்டிஷ் பேரரசு பற்றி அதிகம் கல்வி கற்ற தலைமுறையை சேர்ந்தவன் நான். இந்த வியக்கத்தக்க சாம்ராஜ்யம் குறித்து இன்னும் நிறைய தகவல்கள் மற்றும் தரவுகளை சினிமா உள்ளிட்ட விஷயத்தின் மூலம் அறிந்து கொள்ள ஆவலாக உள்ளேன்" என குறிப்பிட்டுள்ளார்.
Also Read | அடுத்த 90 வருசத்துக்கு சீல்.. ராணி எலிசபெத் உயில் குறித்து வெளியான ஆச்சரியமூட்டும் தகவல்கள்!!