Tiruchitrambalam D Logo Top

"அவர்கிட்ட இருந்து இது ஒன்ன மட்டும் கத்துக்கோங்க".. மறைந்த முதலீட்டு ஜாம்பவான் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா குறித்து ஆனந்த் மஹிந்திரா உருக்கம்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Madhavan P | Aug 22, 2022 11:55 AM

இந்தியாவின் முன்னணி முதலீட்டாளர்களில் ஒருவராக இருந்த ராகேஷ் ஜுன்ஜுன்வாலா அண்மையில் மறைந்தார். இந்நிலையில், அவருடைய ஆலோசனை குறித்த பதிவு ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. இந்திய பணக்காரர்களுள் ஒருவரும் தொழிலதிபருமான ஆனந்த் மஹிந்திரா இதுகுறித்து பதிவிட்டுள்ள புகைப்படம் பலரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.

Anand Mahindra Shares Rakesh Jhunjhunwala Most Valuable Advice

Also Read | "அவர அப்படி பாத்ததே கிடையாது".. இரண்டு நாளா தூங்காம இருந்த சச்சின்.. "எல்லாத்துக்கும் அந்த ஒரு பவுலர் தான் காரணமாம்"

ராகேஷ் ஜுன்ஜுன்வாலா

பங்குச் சந்தை எப்போதுமே பல ஆபத்துகளை உள்ளடக்கியது. பங்குகளின் ஏற்ற இறக்கங்கள் எளிதில் கணிக்க முடியாதவை. இதற்கு பின்னால் உள்ளூர், உலக நடப்புகள் என பல காரணங்கள் இருக்கலாம் என்கிறார்கள் நிபுணர்கள். ஆனால், இதனை துல்லியமாக அறிந்தவர்களில் ராகேஷ் ஜுன்ஜுன்வாலாவும் ஒருவர். பங்குகளின் எதிர்காலத்தை கணித்து, அதனை வாங்கியதன்மூலம் பல்லாயிரம் கோடிகளுக்கு அதிபரானார் ராகேஷ். இந்தியாவின் முன்னணி நிறுவனங்களின் கணிசமான பங்குகளை ராகேஷ் வைத்திருந்தார். இந்நிலையில், கடந்த வாரம்  உடல்நல குறைவால் அவர் மரணமடைந்தார்.

Anand Mahindra Shares Rakesh Jhunjhunwala Most Valuable Advice

ஆனந்த் மஹிந்திரா

மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் துடிப்புடன் இயங்கி வருபவர். இணைய வெளிகளில் தான் சந்திக்கும் மனிதர்களிடையே பன்முக திறமை கொண்டவர்களையும், கடின உழைப்பாளிகளையும் கண்டறிந்து அவர்களுக்கான அங்கீகாரம் வழங்குவதை ஆனந்த் மஹிந்திரா தொடர்ந்து செய்துவருகிறார். அதேபோல தன்னை ஈர்க்கும் விஷயங்கள் குறித்தும் இணைய வெளிகளில் பதிவிடுவது இவரது வழக்கமாகும். இதன் காரணமாக சமூக வலை தளங்கள் வாயிலாக இவரை 9.5 மில்லியன் மக்கள் பின்தொடர்ந்து வருகின்றனர்.

முக்கியமான அறிவுரை

இந்நிலையில், 2019-ம் ஆண்டு ஒரு நேர்காணலின் போது ராகேஷ் ஜுன்ஜுன்வாலா கூறிய சில கருத்துகளை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார் ஆனந்த் மஹிந்திரா. அந்த பதிவில்,"என்னுடைய உடல்நலனில் நான் மோசமாக முதலீடு செய்தேன். இதில் அதிகம் முதலீடு செய்யுங்கள் என உங்கள் அனைவரையும் வலியுறுத்துகிறேன். ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் சொத்து இருந்தாலும் எனது உடல்நலனில் எனக்கு மகிழ்ச்சி இல்லை” என ராகேஷ் குறிப்பிட்டுள்ளார்.

 

இந்நிலையில், இதனை பகிர்ந்த ஆனந்த் மஹிந்திரா,"இந்த பதிவு அதிக அளவில் ஷேர் செய்யப்பட்டுள்ளது. ராகேஷ் ஜுன்ஜுன்வாலா தனது வாழ்வின் இறுதி காலத்தில் முன் எப்போதும் இல்லாத வகையில் மிகவும் மதிப்புமிக்க, லாபகரமான முதலீட்டு அறிவுரையை வழங்கி உள்ளார். அந்த அறிவுரை பல நூறு கோடி மதிப்பு கொண்டது. அதன் சிறந்த பகுதி என்னவென்றால், ‘உங்கள் நேரத்தை முதலீடு செய்யுங்கள் பணத்தை அல்ல’ என்பது ஆகும்” எனக் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

Also Read | சிசிடிவி காட்சிகள்.. புதரில் கிடந்த சூட்கேஸ்.. திருமணமான அதே நாள் இரவில் நடந்த அதிர்ச்சி.. திடுக்கிடும் பின்னணி!!

Tags : #ANAND MAHINDRA #RAKESH JHUNJHUNWALA #RAKESH JHUNJHUNWALA MOST VALUABLE ADVICE #ANAND MAHINDRA SHARES RAKESH JHUNJHUNWALA ADVICE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Anand Mahindra Shares Rakesh Jhunjhunwala Most Valuable Advice | India News.