'சோசியல் டிஸ்டன்ஸ் பைக்...' 'என் மகளுக்காக செஞ்சுருக்கேன்...' 'அவங்கள நம்பி பிரயோஜனம் இல்ல...' அசத்தும் தொழிலாளி...!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Issac | Apr 30, 2020 09:51 PM

கொரோனா காலத்திற்கு பிறகு தனது மகள் சமூக இடைவெளியுடன் பயணிக்க நவீன வகையில் இருசக்கர வாகனம் ஒன்றை தயாரித்து அசத்தியுள்ளார் திரிபுரா மாநிலத்தை சேர்ந்த தொழிலாளி.

A two-wheeler for her daughter to travel with social distance

கொரோனா வைரசை கட்டுப்படுத்த அனைத்து நாடுகளும் வலியுறுத்துவது சமூக இடைவெளியும், தனிமைப்படுத்தி இருந்தலும் தான். இதனை கடைபிடிக்கும் வகையில் புதிய இருசக்கர வாகனம் ஒன்றை வடிவமைத்துள்ளார் திரிபுரா மாநிலத்தை சேர்ந்த ஷாகா(39).

தொலைக்காட்சி பெட்டி பழுதுபார்க்கும் கடையில் வேலை செய்து இவர் தற்போது ஊரடங்கு காலத்தில் தனது நேரத்தை நல்ல வகையில் உபயோகித்துள்ளார் என்றே சொல்லலாம்.

இன்றைய காலகட்டத்தில் வீட்டை விட்டு வெளியே வரும் மக்கள் கண்டிப்பாக சமூக இடைவெளியை கடைபிடிக்கவேண்டும் என அரசு வலியுறுத்தி வருகிறது. இதனால் அனைவரும் பயன்படுத்தும் வகையிலும், சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையிலும் ஒரு இரு வாகனத்தை வடிவமைக்க நினைத்துள்ளார்.

ஷாகாக்கு தெரிந்த பழைய இரும்புப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளில் பழைய இருசக்கர வாகன எஞ்சின் மற்றும் இருசக்கர பாகங்களையும் வாங்கியுள்ளார். இதனை கொண்டு பேட்டரியால் இயங்கும் சுமார் 3.2 அடி நீளம் உடைய  இருசக்கர வாகனத்தை செய்து அசத்தியுள்ளார் ஷாகா. இந்த இரு சக்கர வாகனத்தை தயாரித்தவுடன் அதில் தன் 8 வயது செல்ல மகளை சமூக இடைவெளியை பின்பற்றி இருவரும் பயணம் மேற்கொண்டுள்ளனர்.

மேலும் இதுபற்றி அவர்கூறும் போது, ' கொரோனா வைரஸிற்கு மருந்த கண்டுபிடிக்க முடியாத இந்த நேரத்தில், ஊரடங்கு முடிந்ததும் மக்கள் சமூக இடைவெளியை பின்பற்றுவார்கள் என நான் நம்பவில்லை. மேலும் பள்ளி திறந்தால் என் மகள் செல்லும் பேருந்து கூட்ட நெரிசலாக இருக்கும் எனவே அவள் தனியே, சமூக இடைவெளியை பின்பற்றி செல்லவேண்டும் என்பதற்காகவே நான் இந்த வாகனத்தை தயாரித்துள்ளேன். எந்த கவலையும் இன்றி நானே என் மகளை பள்ளிக்கு சென்று சேர்ப்பேன்' எனவும் கூறியுள்ளார் ஷாகா.

பேட்டரியால் இயங்கும் இந்த இருசக்கர வாகனம் மணிக்கு 40 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் எனவும், 3 மணி நேரம் சார்ஜ் செய்தால் 80 கிலோ மிட்டர் வரை பயணிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார். இதற்கு சார்ஜ் செய்வதற்கு 10 ரூபாய் மட்டுமே செலவாவதாகவும் ஷாகா தெரிவித்துள்ளார்.

இயற்கைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படுத்தாமல் பேட்டரியால் இயங்கும் இந்த வாகனம் பெரிதும் வைரலாகி, திரிபுரா மாநில முதலமைச்சருக்கும் சென்று சேர்ந்தது. இந்த இருசக்கர வாகன வடிவமைப்பையும் ஷாகாவின் முயற்சியையும் கண்டு வியந்த திரிபுரா மாநில முதலமைச்சர் பிப்லாப் குமாரும் பாராட்டு தெரிவித்துள்ளார். இது குறித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ள அவர் கொரோனா தொற்றை ஒழிக்க சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இருசக்கர வாகனத்தை தயாரித்துள்ள ஷாகாவை நான் வாழ்த்துகிறேன் எனவும் பதிவிட்டுள்ளார்.

Tags : #BIKE