'ஃபோட்டோஸ்லாம் அனுப்புறியா?'.. 'பலாத்காரம் செய்து வீடியோ' எடுத்த பாதிரியார்.. 'சிறுமிகளுக்கு நேர்ந்த கொடூரம்'!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Siva Sankar | Dec 31, 2019 12:17 PM

சிறுமியரை பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து மிரட்டிய குற்றத்துக்காக, கடந்த 2009-ஆம் ஆண்டில் இருந்து போலீஸாரின் கஸ்டடியில் இருந்துள்ளார் பாதிரியார் லோரன் காப் (Loren Copp).

former paster jailed for abusing and filming minor girls

50 வயதான லோரன் காப், சொந்தமாக பீஸ்ஸா ஷாப்பையும், கராத்தே ஸ்கூலையும் நடத்தி வந்துள்ளார். அப்போது பெற்றோர்களிடம் இருந்து வெவ்வேறு காரணங்களால் பிரிந்து வாழ்ந்த 9 வயது மற்றும் 11 வயது சிறுமியரிடம், பேஸ்புக்கில், 13 வயது சிறுமியின் பெயரில் இருக்கும் தனது போலி கணக்கின் மூலம் நட்பாக பழகி அவர்களின் தகாத புகைப்படங்களை அனுப்ப சொல்லியிருக்கிறார். பிறகு அவர்களை தன்னிடம் வரவழைத்துள்ளார்.

அவர்களும் நம்பி வந்தபோது அவர்களை வலுக்கட்டாயமாக பீஸ்ஸா ஷாப்பில் பணிபுரியவைத்ததோடு, அவர்கள் வீடு திரும்பினால் வாழவே விடமாட்டேன் என்று அச்சுறுத்தியுள்ளார். அதன் பிறகு அந்த சிறுமியரை  மட்டுமல்லாது, மேற்கொண்டு 8 சிறுமியரை பாலியல் ரீதியாக பலாத்காரம் செய்தும், அவர்களை வீடியோ எடுத்தும் துன்புறுத்தியுள்ளார்.

இந்நிலையில்தான் இவருக்கு 65 ஆண்டு காலம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

Tags : #PASTOR #JAIL