நாலு பேரையும் 'தூக்குல' போடுற... பணத்தை வச்சு... மக 'கல்யாணத்தை' நடத்த போறேன்!
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Manjula | Jan 09, 2020 11:09 PM
நிர்பயா குற்றவாளிகள் நால்வரையும் தூக்கில் போடுவதால் கிடைக்கும் பணத்தை வைத்து, தன்னுடைய மகளின் கல்யாணத்தை நடத்தப்போவதாக ஹேங்மேன் பவான் ஜல்லார்ட் தெரிவித்து உள்ளார்.
நிர்பயா குற்றவாளிகளை ஜனவரி 22-ம் தேதி காலை 7 மணிக்கு தூக்கிலிட வேண்டுமென்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டெல்லி திகார் சிறையில் கேங்மேன் இல்லாத காரணத்தால் மீரட் சிறையிலிருந்து பவான் ஜல்லார்ட் என்ற ஹேங்மேன் குற்றவாளிகளைத் தூக்கிலிட அழைக்கப்பட்டுள்ளார்.
தற்போது உத்தர பிரதேச அரசாங்கம் பவான் ஜல்லார்டுக்கு மாதம் ரூபாய் 5000 சம்பளமாக அளிக்கிறது. அரசுத்தரப்பில் சிறு வீடு ஒன்றும் அவருக்கு அளிக்கப்பட்டுள்ளது. தற்போது அவரது மகள் திருமண வயதை எட்டிவிட்டதால் நிர்பயா குற்றவாளிகளை தூக்கில் போடும் பணத்தை வைத்து மகளின் திருமணத்தை நடத்த பவான் திட்டமிட்டு இருக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், '' உயிர்களை பறிக்கும் தொழில்தான் எனக்கு சாப்பாடு போடுகிறது. குற்றவாளிகளை தூக்கில் போடுமுன் பலமுறை ரிகர்சல் பார்க்க வேண்டியுள்ளது. ஒரு குற்றவாளிக்கு 25 ஆயிரம் வீதம் 4 பேரையும் தூக்கில் போட்டால், ரூபாய் 1 லட்சம் பணம் கிடைக்கும். அதை வைத்து மகளின் கல்யாணத்தை நடத்த இருக்கிறேன். பொதுவாக, தூக்கில் போடுவதற்கு முன் ஹேங்மேன்கள் மது அருந்துவார்கள் என்று கூறுகிறார்கள். அது தவறு. இது எங்களுடைய வேலை. மது அருந்தாமல் நிதானத்துடன் இருந்தால் மட்டுமே இந்தப் பணியை முடிக்க முடியும்,'' என தெரிவித்துள்ளார்.