'நாம தேடுற நாய் இந்த கூட்டத்துக்கு உள்ள தான் இருக்கும்...'ஆனா 'எந்த நாய்'ன்னு தெரியல..! 40 நாய்களை கறியில் விஷம் கலந்து கொன்ற கொடூரம்...!
முகப்பு > செய்திகள் > இந்தியாஒடிசா மாநிலத்தில் தான் வளர்ந்து வந்த ஆட்டை தெரு நாய் கடித்ததால், சுமார் 40 நாய்களை விஷம் வைத்து கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒடிசாவின் கட்டாக் மாவட்டத்தின் மஹாங்கா பகுதியில் வசித்து வரும் பாரத் மல்லிக் என்பவர் செல்லமாக ஒரு ஆட்டை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் மேய்வதற்காக சென்ற தன் ஆடு வீடு திரும்பாததால் அதனை தேடும் பணியில் இறங்கியுள்ளார். அப்போது தான் ஆசையாக வளர்த்த ஆடு, தெரு நாய் கடித்து உயிரிழந்திருந்துள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த பாரத் தன் ஆட்டை கடித்த நாயை பழிவாங்க வேண்டும் என்று நினைத்து ஒரு விபரீத முடிவெடுள்ளார். ஆட்டை கடித்த நாய் எப்படியும் ஊருக்குள் இருக்கும், ஆனால் எந்த நாய் என்று தெரியாததால், பாரத்தும் அவரது நண்பரும் சேர்ந்து அக்கிராமத்தில் இருக்கும் அனைத்து தெரு நாய்களையும் கொல்ல திட்டம் தீட்டியுள்ளனர்.
கறித்துண்டுகளில் விஷம் தடவி, அதனை நாய்களுக்கு சாப்பிட போட்டுள்ளனர். விஷம் கலந்த கறி துண்டுகளை சாப்பிட 40-க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் துடிதுடிக்க இறந்துள்ளன.
தீடீரென நாய்கள் அனைத்தும் அடுத்தடுத்து இறந்த சம்பவம் கிராமமக்களை சந்தேகத்தில் ஆழ்த்தியுள்ளது. இதன் காரணமாக கிராமத்தின் சர்பஞ்ச் புகார் அளித்ததையடுத்து போலீசார் விசாரணை செய்ததில் இந்த கொடூர சம்பவம் வெளிவந்துள்ளது.
இதுகுறித்து கூறிய கிராம மக்களில் ஒருவர், 'நாய்கள் அனைத்தும் ஒரு துடிதுடித்து இறப்பதைப் பார்ப்பது தாங்க முடியதா ஒன்றாக இருந்தது. இதனை செய்தவர்களுக்கு தக்க தண்டனை வழங்க வேண்டும். இது மனித குலத்திற்கே அவமானமான செயல்' என உணர்ச்சி பொங்க கூறினார்.

மற்ற செய்திகள்
