நாயின் ‘மோப்பத்திறன்’ மூலம் கொரோனாவை கண்டறியும் ஆராய்ச்சி.. ‘இதுமட்டும் சாத்தியமானால்..!’.. நம்பிக்கை தெரிவிக்கும் விஞ்ஞானிகள்..!
முகப்பு > செய்திகள் > உலகம்நாய்களின் மோப்பத்திறன் மூலம் கொரோனா நோயை கண்டறிய முடியுமா என பிரிட்டனில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கொரோனா வைரஸின் தாக்கம் உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 1 லட்சத்து 70 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகியிள்ளனர். 25 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க உலக நாடுகள் தீவிரம் காட்டி வருகின்றன.
இந்த நிலையில் நாய்களின் மோப்பத்திறன் மூலமாக கொரோனா வைரஸை கண்டறிய முடியுமா என பிரிட்டனின் துர்ஹாம் பல்கலைக்கழகம் மற்றும் வெப்ப மண்டல மருந்துக்கான லண்டன் கல்வி மையமும் இணைந்து ஆய்வை தொடங்கியுள்ளது. ஏற்கனவே மலேரியா குறித்த ஆய்வில் நாயின் மோப்பத்திறன் உதவியதுபோல கொரோனா வைரஸை கண்டறிவதிலும் உதவ வாய்ப்பு உள்ளதாக விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இது சாத்தியமானால் கொரோனா தொற்றை வேகமாக கண்டறிய முடியும் என விஞ்ஞானிகள் நம்புகின்றனர். இதன்மூலம் யாரை தனிமைப்படுத்த வேண்டும், யாருக்கு கூடுதல் பரிசோதனை செய்ய வேண்டும் என்பதை விரைவாக கண்டறியலாம் என தெரிவித்துள்ளனர். பாக்டீரியா மற்றும் இதர நோய்களை அறியும் திறன் நாய்களுக்கு உள்ளதற்கு ஆதாரம் இருப்பதாகவும், கொரோனா பரவல் தடுப்பில் இந்த ஆராய்ச்சியை முன்னெடுக்கலாம் என்று நம்புவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.