'என் எஜமானரின் குடும்பத்துகிட்டயே உன் வேலைய காட்டுறியா?'.. 'பதற வைத்த பாம்பு'.. 'வளர்ப்பு நாயின் உருக வைத்த செயல்'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Nov 21, 2019 10:42 AM

திருவெறும்பூர் அருகே, ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் வீட்டுக்குள் நுழைந்த பாம்பினை அவர் வளர்க்கும் நாய் கடித்துக் குதறி அவரை காப்பாற்றியுள்ளது.

TN dog fights with snake and saves his owners family

சோழமாதேவி அம்பேத்கர் நகரை சேர்ந்த பெருமாள் எனும் ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டருடைய வீட்டிற்குள், அப்பகுதியில் இருந்து எப்படியோ பாம்பு ஒன்று நுழைந்துவிட்டது. ஆனால் பாம்பு வீட்டுக்குள் நுழைந்ததை அறியாத பெருமாள், தன் மனைவி மற்றும் மகனுடன்  தோட்டத்தில் இருந்துள்ளார். பெருமாளின் மகள் மட்டும் வீட்டுக்குள் இருந்துள்ளார். அவர்தான் வீட்டுக்குள் வந்த பாம்பினைக் கண்டிருக்கிறார். உடனே பயந்துபோய் செய்வதறியாது தவித்த அவர், வீட்டை விட்டு அலறித் துடித்தபடி வெளியே ஓடிவந்துள்ளார். இதைப் பார்த்த பெருமாளின் குடும்பம் பதறியது.

ஆனால் தனது எஜமானர் வீட்டுக்குள் பாம்பு புகுந்து அனைவரையும் பதட்டப்படுத்திக்கொண்டிருந்த விஷ பாம்பினைக் கண்டு பொறுக்க முடியாமல், பெருமாளின் வளர்ப்பு நாயான முனி, வீரிட்டு பாய்ந்து, பாம்புடன் சண்டையிடத் தொடங்கியது. இறுதியில் பாம்பினை கடித்து குதறியது. தன்னை வளர்த்த எஜமானரின் குடும்பத்தினரின் மீதுள்ள நன்றி , விஸ்வாசத்தில் தனது உயிரையும் துச்சமாக எண்ணி விஷ பாம்புடன் சண்டையிட்ட முனியின் செயல் அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #DOGS