'நாங்களும் சட்டத்த மதிப்போம்ல'.. 'எங்க கிட்டயும் ஹெல்மெட் இருக்கு'.. இணையத்தைத் தெறிக்கவிட்ட ஃபோட்டோ!

முகப்பு > செய்திகள் > கதைகள்

By Siva Sankar | Oct 21, 2019 02:26 PM

உண்மையில் ஹெல்மெட் அணிவதுதான் தலையாய கடமை. இது மனிதர்களுக்கு புரிகிறதோ இல்லையோ. சமீபத்தில் வைரலாகி வரும் நாய் ஒன்றின் புகைப்படத்தில் இருந்து நாய்க்கு புரிகிறது என தெரிகிறது.

Delhi Dog wears helmet and travel in bike viral photo

தலைக்கவசம் உயிர்க்கவசம் என்றெல்லாம் ஹெல்மெட் பற்றிய விழிப்புணர்வு பிரச்சாரங்களை போக்குவரத்து அதிகாரிகள் எத்தனையோ முறை சொல்லியு கேட்காமல், ஹெல்மெட் அணியாமல் சென்ற பலரும் விபத்துக்களில் சிக்கிய சம்பவங்கள் தொடர்ந்தன.

இதனால், அண்மையில் திருத்தப்பட்ட புதிய மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் ஹெல்மெட் கட்டாயம் என்கிற விதி கடுமையாகக் கண்காணிக்கப்பட்டது. அவ்வாறு ஹெல்மெட் அணியாதவர்களின் அபராதத் தொகையும் அதிகரித்தது. இந்நிலையில், டெல்லியில் ஹெல்மெட் அணிந்துகொண்டு வாகன ஓட்டியின் பின்னால் அமர்ந்துகொண்டு சென்ற நாய் ஒன்று வைரலாகி வருகிறது.

பலர் இந்த நாயைப் பாராட்டினாலும், சிலர் இதுவும் போக்குவரத்துக் காவல்துறையின் விழிப்புணர்வு பிரச்சாரத்தின் ஒரு அங்கமாக இருக்கலாம், ஆனாலும் நல்ல விழிப்புணர்வுதான் இது என்று கருத்துக்களை பதிவிட்டுள்ளனர். சிலர் இதுதான்யா டெல்லி போக்குவரத்து போலீஸ். ஒரு நாய் கூட ஹெல்மெட் அணிந்து செல்லவைத்திருக்கிறார்கள் என்றும் பாராட்டியுள்ளனர். 

Tags : #TRAFFICCOP #TRAFFIC #ROADSAFTEY #DOGS