‘எங்களால தரையிறங்க முடியல இங்க’.. வானிலேயே வட்டமடித்த.. ‘விமானி கூறிய காரணம்..’
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Saranya | Aug 14, 2019 12:32 PM
விமான ஓடுதளத்தில் நாய்கள் இருந்த காரணத்தால் ஏர் இந்தியா விமானம் ஒன்று தரையிறங்க முடியாமல் வானிலேயே வட்டமடித்துள்ளது.

நேற்று மும்பையிலிருந்து கோவாவின் டபோலிம் சர்வதேச விமான நிலையத்திற்கு ஏர் இந்தியா விமானம் ஒன்று வந்துள்ளது. அதிகாலை 3 மணியளவில் விமானி அந்த விமானத்தை தரையிறக்கும்போது ஓடுதளத்தில் 5 முதல் 6 நாய்கள் இருந்துள்ளது.
இதைப் பார்த்து விமானத்தை தரையிறக்கும் முடிவைக் கைவிட்ட விமானி உடனடியாக இந்தத் தகவலை விமான நிலைய அதிகாரிகளுக்குத் தெரிவித்துள்ளார். பின்னர் அவர்கள் வந்து ஓடுதளத்தில் இருந்த நாய்களை விரட்டியுள்ளனர். இதைத்தொடர்ந்து அதுவரை வானிலேயே வட்டமடித்துக் கொண்டிருந்த விமானம் பத்திரமாகத் தரையிறக்கப்பட்டுள்ளது.
அதிகாலை நேரம் என்பதால் ஓடுதளத்தில் நாய்கள் வந்ததைப் பார்க்கவில்லை என விமான நிலைய அதிகாரிகள் சார்பில் கூறப்பட்டுள்ளது. மேலும் இதுபோல ஓடுதளத்தில் நாய்கள், பறவைகள் ஆகியவை நுழைவதைத் தடுக்க கூடுதலாக ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
