வரவேற்பில் திடீரென 'மயங்கி' விழுந்த மாப்பிள்ளை... திருமணத்தில் பங்கேற்ற '70 குடும்பத்தினருக்கும்' காத்திருந்த அதிர்ச்சி!
முகப்பு > செய்திகள் > இந்தியாவரவேற்பில் திடீரென மயங்கி விழுந்த மாப்பிள்ளையால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

ஆந்திராவின் பக்திகொண்டா மண்டலம் பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் வேலை செய்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டு இருந்தது. கடந்த 10-ம் தேதி தன்னுடைய திருமணத்திற்காக ஹைதராபாத் வந்தார்.
நேற்று முன்தினம் அவருக்கும் அந்த இளம்பெண்ணிற்கும் திருமணம் நடைபெற்றது. இதையடுத்து இரவு வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது மாப்பிள்ளை திடீரென மயங்கி விழுந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் அவரை தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். தொடர்ந்து சந்தேகத்தின் பேரில் அவருடைய கொரோனா டெஸ்ட் பற்றி கேட்டபோது அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து அவரை கர்னூல் கொரோனா வார்டிற்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மணப்பெண் தனிமைப்படுத்தப்பட்ட முகாமிற்கு அனுப்பி வைத்தனர். திருமணத்தில் பங்கேற்ற சுமார் 50 உறவினர்கள், கிராமத்தை சேர்ந்தவர்கள் உட்பட அனைவரும் திருமண வரவேற்பில் சமைக்கப்பட்ட உணவை சாப்பிட்டதால் கிராமம் முழுவதும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து 70 குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கும் கொரோனா பரிசோதனைக்கு சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு வருகிறது.

மற்ற செய்திகள்
