'ஈவு இரக்கமின்றி 51 முறை'... டெல்லி வன்முறையில் கொல்லப்பட்ட ஐ.பி அதிகாரி!.. வெளியான பகீர் தகவல்
முகப்பு > செய்திகள் > இந்தியாகுடியுரிமை திருத்த சட்டத்தால் டெல்லியில் கடந்த பிப்ரவரி மாதம் கலவரம் வெடித்தது. வன்முறையில் 53 பேர் கொல்லப்பட்டனர். 400- க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். பிப்ரவரி 26ம் தேதி சாந்த் பாக் பகுதியில் உள்ள கழிவுநீர் வாய்க்காலில், ஐ.பி உளவு அமைப்பின் அதிகாரி அங்கீத் சர்மா சடலமாக கிடந்தார். அங்கீத் சர்மா கொலை தொடர்பாக, ஆம் ஆத்மி கட்சி கவுன்சிலர் தாகீர் ஹூசேன் உள்ளிட்ட 10 பேர் கைது செய்யப்பட்டனர். சாந்த் பாக் பகுதியில் பிரபலமானவராக இருந்த அங்கீத் சர்மாவை தாகீர் ஹூசைன் உள்ளிட்ட கும்பல் கட்டடம் ஒன்றுக்குள் இழுத்துச் சென்று கத்தியால் குத்தி கொன்றதாக சொல்லப்பட்டது. இந்த குற்றச்சாட்டையடுத்து, ஆம் ஆத்மி கட்சியிலிருந்தும் தாகீர் ஹூசைன் நீக்கப்பட்டார்.

டெல்லி வன்முறை தொடர்பாக தாகீர் ஹூசைன் மீது இரு வழக்குகள் பதியப்பட்டுள்ளன. டெல்லி வன்முறை வெடிக்க காரணமாக இருந்தார் என்று ஒரு வழக்கும், அங்கீத் சர்மா கொலை வழக்கு தனியாகவும் அவர் மீது பதியப்பட்டிருந்தது. இந்த வழக்குகளில் டெல்லி நீதிமன்றத்தில் போலீஸ் தரப்பில் இன்று குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யப்பட்டது. ஐ.பி அதிகாரி கொல்லப்பட்ட வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில், "அங்கீத் சர்மா உடல் 51 முறை கத்தியால் குத்தப்பட்டுள்ளது. உளவு அமைப்பின் அதிகாரி என்பதால் அந்த பகுதியில் அங்கீத் சர்மா பிரபலமானவராக இருந்துள்ளார். எனவே, அவரை குறி வைத்து தாகீர் ஹூசைன் தலைமையிலான கும்பல் தாக்கி கொன்றுள்ளது" என்று சொல்லப்பட்டுள்ளது.
மற்றோரு குற்றப்பத்திரிகையில், "டெல்லி வன்முறை சம்பவம் வெடிக்க தாகீர் ஹூசைன் தனிப்பட்ட முறையில் காரணமாக இருந்துள்ளார். ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக முன்னாள் மாணவர் உமர் காலீத்தை டெல்லி வன்முறைக்கு முன்னதாக அவர் சந்தித்துள்ளார்" என்று கூறப்பட்டுள்ளது. கலவரம், திட்டமிட்ட சதி, வன்முறையில் ஈடுபடுதல், மத பேதமையை ஊக்குவித்தல் மற்றும் ஆயுதச் சட்டத்தின் கீழ் ஹுசைன் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்
