கேம் விளையாடுற மாதிரி இருக்கும்.. ஆனா இது எக்ஸர்ஸைஸ்.. வைரலாகும் விர்ச்சுவல் ஜிம்!

முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்

By Siva Sankar | May 13, 2019 06:49 PM

சினிமாவே ஒரு புது அனுபவம். தொடக்க காலத்தில் 2டியாக வந்த அனுபவம் 5டி வரை எதிர்காலத்தில் பயணிக்கவுள்ளதாக தீர்க்கதரிசிகள் குறிப்பிடுகின்றனர்.

exercise while playing video game - virtual reality gym goes viral

அவ்வகையில் திரையனுபவத்தின் மிக முக்கியமான அடுத்த நகர்வாக உருவாகவிருக்கிற விர்ச்சுவல் ரியாலிட்டி, நவீன யுகத்தையே ஒரு புரட்டு புரட்டப் போகிறது என்பதை பல அறிஞர்களும் முன்னமே கூறி வந்ததுதான். அந்த அளவில் விர்ச்சுவல் ரியாலிட்டி என்பது நம் கற்பனை உலகை சிருஷ்டித்து நம்மை அதற்குள் இட்டுச் செல்லும் வலிமை வாய்ந்ததாக எதிர்காலத்தில் இருக்கக் கூடும்.

அப்படியான விர்ச்சுவல் ரியாலிட்டி வகையிலான விளையாட்டுகளும், திரைப்படங்களும் நம்மை அதன் உலகத்துக்குள்ளேயே தத்ரூபமாக பயணிக்கச் செய்யும். எப்படி 3டி கண்ணாடிகளை போட்டுக்கொண்டு படங்களை பார்க்கும்போது நாம் அந்த பிம்பங்களுக்கு அருகில் வெகு பக்கமாக இருப்பதுபோல் உணர்கிறோமோ அதே போல், விர்ச்சுவர் ரியாலிட்டியில் நாம் அந்த சூழலில் அந்த பிம்பங்களோடு பிம்பமாக நாமும் இருப்பதாக உணரமுடியும்.

அப்படியான விர்ச்சுவல் ரியாலிட்டி முறையிலான உடற்பயிற்சி மையம், அதாவது ஜிம்,பிளாக்-பாக்ஸ் என்கிற சான் பிரான்சிஸ்கோவின் புகழ்பெற்ற நிறுவனம் நிறுவியுள்ளது. இங்கு வீடியோ கேம் விளையாட வரும் பலருக்கும் உடல் பாகங்களில் பொருத்திக்கொள்ளும் சாதனங்கள் கொடுக்கப்படுகின்றன.

அவற்றை பொருத்திக்கொண்டு விளையாடுபவர்களுக்கு விளையாடுவதுபோல் இருக்கும், ஆனால் அவர்களின் குறிப்பிட்ட உடல் பாகங்கள் உடற்பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருப்பதே அவர்கள் அறியாத வண்ணம் இலகுவான முறையில் அவர்கள் உடல்பயிற்சி செய்ய இந்த ஜிம் உதவுகிறது.

Tags : #GYM #VIRTUALREALITY #GAME #VIRAL