மே 7 வரை 'ஊரடங்கு' நீட்டிப்பு... ஸ்விக்கி, சொமாட்டோவுக்கு 'நோ' அனுமதி... அதிரடியில் 'இறங்கிய' மாநிலம்!
முகப்பு > செய்திகள் > இந்தியாமே மாதம் 7-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பதாக தெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர் ராவ் அறிவித்து இருக்கிறார்.
இந்தியா முழுவதும் மே மாதம் 3-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் அறிவித்தார். அதன்படி தற்போது இந்தியா முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் தெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர் ராவ் மே மாதம் 7-ம் தேதி வரை ஊரடங்கை நீட்டிப்பதாக அறிவித்து இருக்கிறார்.
மேலும் வீடுகளுக்கு அனுப்பப்படும் கொரியர் சேவையை ரத்து செய்தும், உணவு டெலிவரி நிறுவனங்களுக்கு தடை விதிப்பதாகவும் அவர் தெரிவித்து இருக்கிறார். இதுதவிர கண்காணிப்பு பகுதியில் உள்ள மக்கள் தங்களை தாங்களே 14 நாட்களுக்கு தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டு இருக்கிறார்.
Tags : #CORONA #CORONAVIRUS #TELANGANA