நாட்டிலேயே 'முதலாவதாக'... ஊரடங்கை மேலும் 'நீட்டித்த' தென்னிந்திய மாநிலம்... என்ன காரணம்?

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Manjula | May 05, 2020 10:58 PM

ஊரடங்கை மே மாதம் 29-ம் தேதி வரை நீட்டிப்பதாக தெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர் ராவ் அறிவித்துள்ளார்.

Coronavirus: Telangana extends lockdown till May 29

இந்தியாவில் கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு மே மாதம் 17-ம் தேதி வரை ஊரடங்கு நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் வருகின்ற மே 29-ம் தேதி வரை ஊரடங்கை நீட்டிப்பதாக தெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர் ராவ் அதிரடியாக அறிவித்திருக்கிறார்.

இதுகுறித்து அவர், '' ஹைதராபாத் மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் நிலைமை மோசமடைந்து வருவதால் எங்களுக்கு வேறு எந்த வாய்ப்பையும் தேர்ந்தெடுக்க வழியில்லை,'' என தெரிவித்து இருக்கிறார். தெலுங்கானா மாநிலத்தை பொறுத்தவரை 1085 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். இவர்களில் 585 பேர் குணமடைந்து உள்ளனர். அதே நேரம் 29 பேர் உயிரிழந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.