"எங்க கிட்ட சரசம் பண்ணுறதுக்குன்னே வருவீங்களா டா?".. ரொமான்டிக்கா போஸ் கொடுத்த மாப்பிள்ளை.. உள்ள வந்து குரங்கு பாத்த வேலை!!
முகப்பு > செய்திகள் > உலகம்இன்றைய காலகட்டத்தில் திருமணத்தை சுற்றி நடக்கும் பல விஷயங்கள் பெரிய அளவில் நெட்டிசன்கள் மத்தியில் வைரல் ஆவதையும் பார்த்திருப்போம்.

Also Read | "என் வாழ்க்கைய அழிச்சுட்டே".. பெண் மீது கவிஞர் தாமரையின் பகிரங்க குற்றச்சாட்டு!!.. பரபரப்பு பின்னணி"
ஒரு திருமணம் நடைபெறும் போது அதனை சுற்றி நடக்கும் ஒவ்வொரு விஷயங்களையும் அடுத்தவர்கள் கவனம் பெறும் அளவுக்கு யோசித்து யோசித்து செய்வார்கள்.
யாருமே செய்யாத வகையில் திருமண போட்டோ ஷூட் ஐடியாக்களை பயன்படுத்துவது, ரேஷன் கார்டு, விமான டிக்கெட், மருந்து அட்டை என திருமண அழைப்பிதழில் கூட புதுமை காட்டுவது என இப்படி திருமணத்தை சுற்றி வைரல் ஆகும் விஷயங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். திருமண மேடையில் நண்பர்கள் கொடுக்கும் பரிசு, மணமக்களின் நடனம் உள்ளிட்ட விஷயங்கள் கூட பலரையும் வெகுவாக கவரும்.
இப்படி விதவிதமாக யோசித்து நாம் செய்யும் அதே சமயத்தில், சில எதிர்பாராத சம்பவங்கள் கூட நம்மை சுற்றி அரங்கேறும். இந்த நிலையில், அப்படி ஒரு சம்பவம் குறித்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் தான் தற்போது இணையத்தை கலக்கி வருகிறது.
பொதுவாக, திருமணத்திற்கு முன்பும், பின்பும் வித விதமாக யோசித்து போட்டோஷூட் எடுப்பார்கள். இதற்காக பல்வேறு இடங்களையும் தேர்ந்தெடுத்து புகைப்படங்கள் மற்றும் வீடியோ எடுப்பார்கள். அப்படி ஒரு ஜோடி, சமீபத்தில் ஒரு பகுதியில் புகைப்படங்களை எடுத்துக் கொண்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
அந்த சமயத்தில், மணப்பெண்ணை தூக்கிய படி மாப்பிள்ளை போஸ் கொடுத்து கொண்டிருக்க, அந்த நேரத்தில் அங்கே ஒரு தாய் குரங்கு குழந்தையைத் தூக்கிக் கொண்டு வருகிறது. அத்துடன் மட்டுமில்லாமல், மாப்பிள்ளை மீது ஏறிய படி சிறிது நேரம் நிற்கவும் செய்கிறது. இது அங்கிருந்தவர்களை வேடிக்கையில் ஆழ்த்த அதன் பின்னர் அங்கிருந்து விலகியும் செல்கிறது.
இது தொடர்பான வீடியோக்கள், தற்போது இணையத்தை கலக்கி வரும் நிலையில், தற்போது அதிக லைக்குகளை அள்ளி வருகிறது.

மற்ற செய்திகள்
