எதே.? ஒரு‌ கேஸ் 72 வருசமா நடந்துச்சா.!! இப்ப மட்டும் எப்படி முடிவுக்கு வந்தது.? சுவாரஸ்ய தகவல்.

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Madhavan P | Jan 27, 2023 08:30 PM

நாட்டின் பழமையான வழக்குகளில் ஒன்றாக கருதப்படும் பெர்ஹாம்பூர் வங்கி வழக்கை கொல்கத்தா நீதிமன்றம் முடித்து வைத்திருக்கிறது.

India oldest pending case finally resolved after 72 years

                          Images are subject to © copyright to their respective owners.

Also Read | "எங்க ஊருக்கு விமானத்தை திருப்புங்க".. கோபத்துல இளைஞர் செஞ்ச காரியம்.. பரபரப்பான ஏர்போர்ட்..!

இந்தியாவில் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கையை குறைக்க நீதித்துறை பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. இந்நிலையில், இந்தியாவின் பழமையான வழக்குகளில் ஒன்றான பெர்ஹாம்பூர் வழக்கை கொல்கத்தா நீதிமன்றம் தீர்த்து வைத்துள்ளது. கடந்த 72 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கு விசாரணை தற்போது நிறைவு பெற்றிருக்கிறது.

மேற்கு வங்க மாநிலத்தில் இயங்கிவந்த பெர்ஹாம்பூர் வங்கி திவாலானது. இதனையடுத்து அந்த வங்கியை கலைக்க கொல்கத்தா உயர்நீதிமன்றம் கடந்த 1948 ஆம் ஆண்டு நவம்பர் 19 ஆம் தேதி உத்தரவிட்டது. வங்கி கலைக்கப்பட்டதை எதிர்த்து 1951 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை கடந்த 72 ஆண்டுகளாக கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

India oldest pending case finally resolved after 72 years

Images are subject to © copyright to their respective owners.

இந்த வழக்கு விசாரணை சமீபத்தில் நீதிபதி பிரகாஷ் ஸ்ரீவஸ்தவா அமர்வில் விசாரணைக்கு வந்தது. இதில் ஒரு சுவாரஸ்யமும் இருக்கிறது. அதாவது இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டு 10 ஆண்டுகளுக்கு பிறகு தான் பிரகாஷ் ஸ்ரீவஸ்தவா பிறந்திருக்கிறார். அந்த அளவு பல ஆண்டுகளாக நடைபெற்று வந்த வழக்கை பிரகாஷ் ஸ்ரீவஸ்தவா தற்போது முடித்து வைத்திருக்கிறார்.

வங்கி கலைப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இருமுறை விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கு விசாரணையில் யாருமே ஆஜராகவில்லை என்பதால் வங்கி கலைப்பு அதிகாரியான ரவி கிருஷ்ண கபூருக்கு உத்தரவிட்டார் நீதிபதி பிரகாஷ் ஸ்ரீவஸ்தவா. அதன்பிறகு 2006 ஆம் ஆண்டே இந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டதாகவும் அதுகுறித்த விபரங்கள் பதிவாகவில்லை எனவும் தெரியவந்தது.

India oldest pending case finally resolved after 72 years

Images are subject to © copyright to their respective owners.

இதனையடுத்து, உடனடியாக இதுப்பற்றி நடவடிக்கை எடுக்கப்பட்டு வழக்கும் முடித்து வைக்கப்பட்டுள்ளது. 72 ஆண்டுகளாக நடந்து வந்த வழக்கு தற்போது முடித்து வைக்கப்பட்டிருப்பது பற்றி பலரும் பரபரப்புடன் பேசி வருகின்றனர்.

Also Read | ஜூடோ ரத்னம் மறைவு..."மறக்க முடியாத சரித்திரம்".. அஞ்சலி செலுத்தி ரஜினிகாந்த் உருக்கம்..!

Tags : #INDIA OLDEST PENDING

மற்ற செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. India oldest pending case finally resolved after 72 years | India News.