மே 3க்குப் பிறகு என்ன செய்யலாம்?.. ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? நீக்கப்படுமா?.. பிரதமருடன் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் வெளியான 'முக்கிய' தகவல்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Manishankar | Apr 27, 2020 03:46 PM

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கை மேலும் ஒரு மாதம் நீட்டிக்க வேண்டும் என்று பிரதமரிடம் மாநில அரசுகள் கோரிக்கை விடுத்துள்ளன.

pm modi video conference with cms to discuss lockdown exit

கொரோனா வைரஸை கட்டுப்படுத்தல் தொடர்பாக அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் மாநில முதலமைச்சர்களுடன் 4வது முறையாக இன்று ஆலோசனை நடத்தினார்.

இதில் அமலில் உள்ள ஊரடங்கு மே 3ஆம் தேதிக்கு பிறகு நீட்டிக்கப்படுமா என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், ஊரடங்கு நீட்டிப்பு பற்றி மே 3-க்கு பிறகே முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிகிறது. ஆலோசனையில் அதிகம் பாதித்த மாவட்டங்களில் ஊரடங்கு தொடரலாம் எனவும், கொரோனா பாதிப்பு இல்லாத இடங்களில் ஊரடங்கு தளர்த்தப்படலாம் என்றும் முடிவு எடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்டுள்ள பொது முடக்கத்தை மேலும் ஒரு மாதம் நீட்டிக்க வேண்டும் என பிரதமர் மோடியிடம் ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் கோரிக்கை வைத்துள்ளார். மேலும், மே 3-ந் தேதிக்கு பிறகும் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என்று பிரதமர் மோடியிடம் மேகாலயா முதல்வர் கன்ராட்  சங்மா கோரிக்கை விடுத்துள்ளார்.

கொரோனாவின் தாக்கம் குறையாததால் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என்று பிரதமரிடம் பீகார், அரியானா உள்ளிட்ட சில மாநில அரசுகளும் வலியுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

PC: ANI