8 வருசத்துக்கு முன்னாடி மாயமான மலேசிய விமானம் குறித்து வெளியான பரபரப்பு தகவல்.!!
முகப்பு > செய்திகள் > உலகம்கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பாக 249 பயணிகளுடன் மாயமான மலேசிய விமானம் குறித்து தற்போது தெரிய வந்துள்ள தகவல் ஒன்று பலரையும் பீதி அடைய வைத்துள்ளது. MH 370 என்னும் மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம், கடந்த 2014 ஆம் ஆண்டு மார்ச் 8 ஆம் தேதியன்று, மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீனாவின் தலைநகரமான பெய்ஜிங்கிற்கு கிளம்பி உள்ளது.
Also Read | ஆசையா ஸ்வீட் ஊட்ட போன மாப்பிள்ளை.. மறுகணமே மணப்பெண் செஞ்ச விஷயம்.. கல்யாண மேடை களேபரம் ஆயிடுச்சு!!
அப்படி ஒரு சூழலில், திடீரென பெய்ஜிங் சென்று கொண்டிருந்த MH 370 விமானம் சிக்னல் ரத்தாகி மாயமானது. இந்த விமானம் காணாமல் போன நிலையில், அதில் பயணம் செய்த 239 பயணிகள் மற்றும் பணியாளர்கள் உள்ளிட்டோரும் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி இருந்தது. அது இந்திய பெருங்கடலில் தான் விழுந்திருக்கும் என்றும் கருதப்பட்டு வந்தது.
இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய மர்மங்களில் ஒன்றாக மாறி இருந்த MH 370 விமானம் எங்கே போனது என்பது குறித்து இதுவரை பெரிய அளவில் தகவல்கள் வெளிவராமல் இருந்த வண்ணம் இருந்தது. இதில், சில சதிகள் இருப்பதாகவும் அவ்வப்போது தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வந்தது. விமானம் கடத்தப்பட்டிருக்கலாம் என்றும் சில கருத்துக்கள் பரவி வந்த நிலையில், தற்போது இந்த விபத்திற்கான காரணம் பற்றி சில தகவல்கள் வைரலாகி வருகிறது.
மலேசிய விமானம் மாயமானது பற்றி அறிந்து கொள்ள சில நிபுணர்கள் ஆய்வில் இறங்கி உள்ளனர். அப்போது தான் சில தகவல்கள் கிடைத்துள்ளது. MH 370 விமானத்தை வேண்டுமென்றே அதனை இயக்கிய விமானி கடலில் செலுத்தி விபத்துக்கு உள்ளாக்கி இருக்கலாம் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர். மலேசிய விமானம் காணாமல் போன 8 ஆண்டுகளுக்கு பிறகு, இந்த ஆண்டு நவம்பரில் மடகாஸ்கர் பகுதியில் மீனவர் ஒருவரின் வீட்டில் காணாமல் போன விமானத்தின் தரையிறங்கும் கதவு உள்ளிட்ட சில பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும், இந்த விமானத்தின் பாகத்தை துணி துவைக்கும் கல் போன்றும் பெண் ஒருவர் பயன்படுத்தி வந்ததும், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் இதனை அவர் கண்டெடுத்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. அந்த விமானத்தின் விமானிகள் இந்த விபத்தை வேண்டுமென்றே ஏற்படுத்தியதை உறுதி செய்வதற்கு இந்த பாகங்கள் முக்கிய பங்கு வகிக்கும் என்றும் சொல்லப்படுகிறது.
விமானத்தின் தரையிறங்கும் கதவை நெருக்கமாக ஆய்வு செய்த வல்லுநர்கள், MH370 விமானிகள் வேண்டுமென்றே விபத்தை ஏற்படுத்தியதாகவும், அதில் உள்ள சேதங்கள் உள்ளிட்டவை காரணமாக தண்ணீரில் மெதுவாக விமானம் தரையிறங்கவில்லை என்பதும் தெரிய வந்துள்ளது. ஏனென்றால், விமானத்தில் கோளாறு ஏற்பட்டால் அதனை முடிந்த வரை தண்ணீரில் மெதுவாக இறக்க வேண்டும் என்பது விமானியின் சாதாரண நெறிமுறை ஆகும்.
இது தான் உறுதியான காரணமாக இருக்கும் என்று சொல்ல முடியாத சூழலில், MH370 விமானம் காணாமல் போய் 8 ஆண்டுகள் ஆகியும் காணாமல் போனதற்கான தெளிவான காரணம் இன்னும் தெரியவில்லை என்றும் 8 வருட தேடலுக்கு பிறகு, பயணிகளின் உடல்கள் கூட கண்டுபிடிக்கவில்லை என்பதும் குறிப்பிபடத்தக்கது.
Also Read | தனக்காக வாழ்க்கையை தியாகம் செய்த அம்மா.. மறுமணம் செய்து அழகு பார்த்த மகள்.. மனதை உருக வைக்கும் காரணம்!!