'இதென்னடா ரெஸ்டோரண்டுக்கு வந்த சோதனை'.. 'பரபரப்பைக் கிளப்பிய மிதக்கும் பில்டிங்'.. வைரலாகும் வீடியோ!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Siva Sankar | Jul 31, 2019 01:42 PM

ஒரு பில்டிங் நதியில் மிதப்பதை நம்ப முடிகிறதா? ஆம், சீனாவின் யாங்ஸ்ட்டே நதியில்தான் பில்டிங் ஒன்று மிதந்துகொண்டிருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

floating restaurant in china Yangtze River bizarre video

சுனாமி, பெருவெள்ளம் போன்றவற்றில் பில்டிங் மூழ்குவதோ, மிதப்பதோ பலராலும் பார்க்கப்பட்டிருக்கக் கூடும். சில உலக நகரங்களில் நகரமே மிதக்கும் என்பதால், மிதக்கும் நகரங்கள் என்று அவை அழைக்கப்படுவதும் உண்டு. ஆனால் ஒரு பெரிய உணவகம், காரணமின்றி ஒரு நதியில் மிதக்குமா என்றால் அது ஆச்சரியமான ஒன்றுதான்.

ஆனால் இந்த வீடியோவில் உள்ள ரெஸ்டோரண்ட் மிதக்கும் ரெஸ்டோரண்ட் என்று சொல்லப்படுகிறது. ஆனால் இந்த ரெஸ்டோரண்ட்டை இடமாற்றி வைப்பதற்காக படகுகளை பயன்படுத்தியதாகத் தெரிகிறது. வீடியோவில் அவை முழுதாக பதிவாகவில்லை எனினும், மிதக்கும் இந்த பில்டிங்கின் வீடியோ பார்ப்பவர்களுக்கு பரபரப்பாக தோன்றி வருகிறது.

Tags : #CHINA #FLOATING RESTAURANT #BUILDING