'சான்ஸ்' மட்டும் குடுக்காதீங்கடா.. திட்டிய ரசிகர்.. பதிலுக்கு 'நேக்கா' கோத்து விட்ட சிஎஸ்கே!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Manjula | Nov 01, 2019 01:26 PM

தியோதர் டிராபி போட்டியில் இந்திய பி அணிக்காக விளையாடி வரும் ருத்ராஜ் கெய்க்வாட் 122 பந்துகளில் 8 போர்கள் 4 சிக்ஸர்கள் உட்பட 113 ரன்களை அடித்து அசத்தினார். இதைத்தொடர்ந்து அவரது புகைப்படத்தை பகிர்ந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ருத்ராஜ்க்கு வாழ்த்துக்கள் தெரிவித்து இருந்தது.

IPL2020: Chennai Super Kings funny reply for fans comment

இதற்கு ரசிகர் ஒருவர், ''இதெல்லாம் போடு. ஆனா சான்ஸ் மட்டும் குடுக்காதீங்கடா டேய்,'' என திட்டி இருந்தார். பதிலுக்கு சென்னை அணி, ''டியர் சூப்பர் கோச்'' என நேக்காக சென்னை அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங்கை டாக் செய்து கோர்த்து விட்டுள்ளது.

இதைப்பார்த்த ரசிகர் ஒருவர், ''எப்படி நேக்கா கோர்த்து விடுறான் பாரு'' என கமெண்ட் அடித்துள்ளார். என்ன ஒரு வில்லத்தனம்!

Tags : #CSK #CRICKET