ஐபிஎல் ஏலப்பட்டியலில் 11 'தமிழக' வீரர்கள்... 'அந்த' ஒரு வீரருக்காக... முட்டி, மோதப்போகும் அணிகள்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Manjula | Dec 18, 2019 01:20 PM

கொல்கத்தாவில் நாளை நடைபெறவுள்ள ஐபிஎல் ஏலத்தில் 11 தமிழக வீரர்கள் இடம் பிடித்துள்ளனர். டிஎன்பிஎல் போட்டிகள், உள்ளூர் போட்டிகள் போன்றவற்றில் சிறப்பாக விளையாடிய வருண் சக்ரவர்த்தி, சாய் கிஷோர், சித்தார்த், மணிகண்டன், அருண் கார்த்திக், ஹரி நிஷாந்த், பாபா அபராஜித், முகமது, எம்.அபினவ், ஷாருக்கான் மற்றும் ஜி. பெரியசாமி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

IPL 2020: 11 Tamil Nadu players featured in this auction list

இதில் டிஎன்பிஎல் போட்டிகளில் சிறப்பாக பந்துவீசிய ஜி. பெரியசாமி மற்றும் சையது முஷ்டாக் அலி போட்டியில் சிறப்பாக விளையாடி அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய சாய் கிஷோர் ஆகியோரை எடுக்க ஐபிஎல் அணிகள் கடுமையாக போட்டிபோடும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக சாய் கிஷோரை ஏலத்தில் எடுக்க சென்னை, மும்பை அணிகள் கடுமையாக மோதும் என கூறப்படுகிறத.

தமிழக வீரர்களை பொறுத்தவரையில் அடிப்படை ஏலத்தொகையும் குறைவு மேலும் உள்ளூர் போட்டிகளிலும் சிறப்பாக விளையாடி கவனத்தை ஈர்த்துள்ளனர். இதனால் தமிழக வீரர்கள் அனைவரும் ஏலத்தில் எடுக்கப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பு நிலவிவருகிறது.

Tags : #IPL #CRICKET