‘நின்னுட்டே இருந்தா யார் ரன் எடுப்பா’... ‘இதுக்கு செக்யூரிட்டி போதுமே நீங்க எதுக்கு?’... ‘விளாசி’ தள்ளிய முன்னாள் வீரர்...

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Saranya | Mar 06, 2020 07:00 PM

நியூசிலாந்தில் அஜிங்கிய ரஹானே பேட்டிங் செய்த  விதம் குறித்து சந்தீப் பாட்டீல் கடுமையாக விமர்சித்துள்ளார்.

Call A Security Sandeep Patil Questions Ajinkya Rahanes Batting

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் மற்றும் தலைமை தேர்வாளர் சந்தீப் பாட்டீல், நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது அஜிங்கிய ரஹானே அதிக எச்சரிக்கையுடன் விளையாடியதாக விமர்சித்துள்ளார். இதுகுறித்துப் பேசியுள்ள சந்தீப் பாட்டில், “இந்திய அணியின் டெஸ்ட் துணைக் கேப்டன் ரஹானே தான் டெஸ்ட் போட்டிகளில் சிறந்தவர் என்பதைக் காட்டிக்கொள்ள விரும்புகிறார்.

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியிலும் அவர் களத்தில் நீண்ட நேரம் நிற்கவே முயன்றுள்ளார். கிரீஸில் மட்டுமே நின்றிருந்தால், யார் ரன்களை எடுப்பார்கள். மேலும், கிரீஸில் நிற்க வேண்டுமென்றால், அதற்கு கிரிக்கெட் வீரர் எதற்கு, பாதுகாப்பு காவலரை அழைத்தாலே போதுமே” எனக் கடுமையாக விமர்சித்துள்ளார்.

மேலும் பேசியுள்ள சந்தீப் பாட்டீல், “ரஹானேவுக்கு இது புரியவில்லை என்றால், அவரை சரி செய்ய வேண்டிய ரவி சாஸ்திரி மற்றும் விக்ரம் ராத்தோர் என்ன செய்துகொண்டிருக்கிறார்கள்? ஒரு பேட்ஸ்மேன் இதைச் செய்தால், அதன்பிறகு அணியினரும் இதையே செய்யத் தொடங்குவார்கள். இந்த மாதிரியான பேட்ஸ்மேனுக்கு அடுத்து ஆட வரும் வீரர்களும் பவுலிங் சிறப்பாக உள்ளது என்றே நினைப்பார்கள்” எனக் கூறியுள்ளார்.

Tags : #CRICKET #INDVSNZ #AJINKYA RAHANE #SANDEEPPATIL